பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளடெல்பியா 24-4-85 16: வரும். அந்நிலையினை எண்ணிப்பார்க்கக்கூட இங்கே இட மில்லை. பிற்பகல் 1 மணி அளவில் இக்கூட்டம் முடிவுற்றது. இக்கூட்டம் தனியாக, பெரும்காட்சிச் சாலையினை ஒட்டிய மண்டபத்தே நடைபெற்றது. - கூட்டம் முடிந்தவுடன் தமிழ்த்துறையினைச் சேர்ந்த திருமதி இராஜம் அவர்கள் ஆற்றுப்படுத்த, திரு. நெடுமாறன் என்பவர் (ஆசிரியராகவும் அதே வேளையில் எம். ஏ.' மாணவராகவும் உள்ளவர்) அங்கிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று உணவளித்தார். அவர் மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து பின் இங்கே வந்து தமிழ் எம்.ஏ. பயிலுகிறார். ஆரம்பத் தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு முதலில் தமிழில் பேசக் கற்றுக்கொடுக்கிறார்; நல்ல அன்பர். அவர்தம் துறைத் தலைவராகிய திருமதி. இராஜம் அவக்களுடன் நன்கு ஒத்துழைத்துத் தமிழ் நலம் காணப் பாடுபடுகிறார். உணவுக்குப்பின் பேராசிரியர் அறைக்குச் சென்று சிறிது நேரம் தங்கினேன். சரியாக 2.30க்குக் கூட்டம். கூட்டத். திற்கு இப்பகுதித் தலைவர் திருமதி. ரோசனே ரோச்சர் உட் பட சில ஆசிரியர்களும் சில மாணவர்களும் வந்திருந்தனர். தலைப்பு 'தமிழ்ப்பல்கலைக்கழகம் அதன் செயல்முறையும் பயனும் என்பது. நான் தமிழ்ப்பல்கலைக் கழக அமைப்பு, துறைகள், தஞ்சை, காஞ்சி, உதகை, மண்டபம் ஆகிய இடங் களில் உள்ள பலவகைப் பணிநிலைகள் ஆகியவற்றை விளக்கி, அதன்வழியே தமிழ்நாட்டுப் பழம்பெறும் இலக்கிய இலக்கணங்கள் மட்டுமின்றி தமிழ்ர்தம் க்லை, பண்பாடு, நாகரிகம் முதலியனவும் உலகுக்கு உணர்த்தப்பெறுவதோடு எங்குமுள்ள தமிழர்கள்ையும் இணைத்துத் தமிழ் நலம் காணும் பாலமாகவும் அமையும் தன்மைகளை விளக்கி 40 (நாற்பது) நிமிடங்கள் பேசினேன். பின் இருந்தவர்கள் சில கேள்விகள் கேட்கப் பதில் உரைத்தேன். கூட்டம் 3.30க்கு (ஒரு மணி நேரம்) முடிந்தது. பிறகு பேராசிரியர் அறைக்கு வந்திருந்து, சிலரது அறிமுகம் பெற்றதோடு, அவர்களிட ஏ.-11