பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மிருந்து விடைபெற்றுக்கொண்டு அறைக்குப் புறப்பட்டேன். அவர்கள் நாளை கடைசிநாள் எனவும், அன்று நடைபெறும் விருந்திற்கு (மாலை 6.30க்கு) நானும் வரவேண்டும் எனவும் கூறி, திரு. நெடுமாறன் அவர்களை உடன் அனுப்பி இன்றும் நாளையும் காணவேண்டியவற்றை அவருடன் காணுமாறு வழி அனுப்பினர். பின்னர் நெடுமாறன் அவர்கள் என்னுடன் விடுதிக்கு வந்திருந்து மாலை ஆறுமணி வரையில் உரை யாடிக்கொண்டிருந்து, பின் புறப்பட்டுச் சென்றார். நான் பல்கலைக்கழக அமைப்பு, நடைமுறை முதலியவை களை எண்ணிக்கொண்டே வியந்தேன். மிகப்பெரிய எல்லை யில் எத்தனை எத்தனை விதமான கட்டடங்கள்; எத்தனை நாட்டு மாணவர்கள்-எத்தனை வகையான துறைகள் . உலக மொழிகள் அனைத்துக்கும் இடம், ஆய்வுப்பட்டம் பெற அமைந்த இயல்புகள் அனைத்தும் என் உள்ளத்தைத் தொட்டன. ஆசிரியர் கடமை தவறாது உரிய வேளைக்கு வகுப்பிற்குச் சென்று கடமை உணர்வோடு சொல்லித்தரு வதையும் கண்டேன். ஒவ்வொரு ஆசிரியரும் தாம் சொல்லித் தரும் பாடங்களை முன் சில மணி நேரமாவது ஆய்ந்து கண்டுதான் வகுப்புகளுக்குச் செல்வர் என அறிந்தேன். அப்படியே பலப்பல நாடுகளிலிருந்தும் இந்நாட்டுப் பலபகுதி களிலிருந்தும் வந்து பயிலும் மாணவர்கள் கருத்தொடு கற்கும் நிலை கண்டு வியந்தேன். ஒரு மாணவர் எம். ஏ. பட்டம் அல்லது ஆய்வுப் பட்டம் பெறக் குறைந்தது ஒன்பது ஆயிரம் அல்லது பத்தாயிரம் டாலர் (சுமார் 1,00,000 ரூபாய்) செல்வாகுமாம். அவ்வளவு செலவு செய்து யாரே வீணே காலம் கழிப்பர். தமிழ்நாட்டில் உள்ள எம்.ஏ. படிப்பதை விட்டு இங்கே வந்து பயில்வானேன் என்று நான் கேட்டேன். பயில்கின்றவர்கள் இரண்டிற்கும் உண்டான வேறுபாட்டினை விளக்கியபோது வியந்தேன். தமிழ் மொழி மட்டுமின்றி, தமிழ்நாடு பற்றிய அனைத்தையும் - தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத இந்நாட்டவரும் பிறரும் - கற்றும் - கேட்டும் சொல்லித்தந்தும் தமிழ்நாட்டின் தொன்