பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளடெல்பியா 25.4.85 165 வயதுக்குட்பட்டவருக்கும் (6 வயதுக்குமேல்) 60க்கு மேல் வயதானவர்க்கும் பாதிக் கட்டணம் தானாம். பிள்ளைகள் பெண்கள் இருந்தாலும் பதினெட்டு வயதானவுடன் அவர் கள் தனியே சென்று விடுவார்களாம். மூத்த பெற்றோர். வசதியுள்ள சிலர் தவிர - பலரும் வாடுவார்களாம். அவர் களுக்கெனத் தனியாக அரசாங்கம் இலவச விடுதிகள் அமைத்துள்ளனவாம். அங்கும் அவர்தம் நிலை அவலமாக உள்ளது என்றனர். எனவே இரெயில், பஸ் எல்லாவற்றிலும் பாதிக் கட்டணத்துடனேயோ அன்றிக் கட்டண மின்றியோ அவர்கள் பயணம் செய்ய அனுமதித்துள்ளார்கள், இங்குள்ள மக்கள் வாழ்விலே பிணைப்பு இல்லை; பற்று இல்லை: பாசம் இல்லை; ஏதோ நாகரிகம் என்ற பெயரிலே எங்கோ வேற்று உலகுக்குச் சென்று கொண்டிருப்பதாக நான் நினைத்தேன். என் நினைப்புக்கு இடையில் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. அது அமெரிக்க நாட்டிற்கு உரிமை வாங்கிச் சாசனம் செய்த இடம் (1775) என்றனர். அங்கேதான் உரிமைச் சாசனம் கை எழுத்தாயிற்றாம். அதற்கு முன் கிளர்ச்சியும் அங்கே நடைபெற்றதாம். கட்டடத்தின் உள்ளே கீழும் மேலும் இருபெரு அறைகள் இருந்தன. ஒன்று இருந்து பேசிக் கையொப்பமிட்ட அறை. அன்று பயன்படுத்தப் பெற்ற பொருள்கள் அப்படியே காட்சிப் பொருள்களாக வைக்கப்பெற்றுள்ளன. அன்று. கிளர்ச்சிக்குப் பின் பயன்படுத்தப்பெற்ற பிற அறைகளிலும் மேசை நாற்காலிகள் அப்படியே இருந்தன. அமெரிக்க மக்கள் அந்த இடத்தைக் கண் எனக் காத்து வருகின்றனர். பின் வாஷிங்டனும் நியூயார்க்கும் பெருநகரங்களாக மாறிய போதிலும், இதில் (இந்நகரம் 5வது பெருநகரம் என்றனர்) அந்த உரிமைச் சாசனம் செய்யப்பெற்ற இடம் தூய்மையா கக் காக்கப்பெறுகின்றது. பின் அந்த உரிமைநாளில் உரிமை உணர்த்திய பேரொலி எழுப்பிய மணியிருந்த மணி மண்ட பத்துக்குச் சென்றோம். அது சற்றே புதிய கட்டடம். (முந்தியவை) இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்திய- நம் சென்னை சேப்பாக்கம் கட்டடங்களைப் போன்று, பழைமை