பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வாய்ந்தவை) மணி ஒரு பக்கம் விரிசல் கண்டிருந்தது. அதைச் சுற்றிலும் காவல் இருந்ததோடு, அதன் சிறப்பையும் விளக்கினர். இந்நாட்டு மக்கள் உரிமை வாங்கித் தந்த பொருள்களைப் போற்றும் முறைகண்டு வியந்தேன். பின் பல்கலைக்கழகத் தொடர்பான பொருட்காட்சிச் சாலையினைக் கண்டேன். அங்கு, நான் நியூயார்க்கில் கண்டது போன்ற, பொருள்கள் இல்லை. எனினும் பல நாட்டு பழம்பொருள்கள் படங்களாகவும் சிலைகளாகவும் பிறவாகவும் காக்கப்பெறுகின்றன. நம் நாட்டுத் தஞ்சைப் பெரிய கோயிலும், காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் காட்சிப் பொருளாக நல்ல வகையில் படமாக்கி வைக்கப்பெற்றுள்ளன. இந்த ஊரில் பிற ஊர்களில் காணாத நிலையில் தமிழ் மணம் வீசுகிறது. பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் படிப்பு - விடுதியில் வணக்கம். இங்கே பழங்கோயில்கள். மற்றொரு பக்கத் தில் எகிப்து நாட்டில் 3500 ஆண்டுகளாகச் சமய அடிப்படை யிலும் சமுதாய அடிப்படையிலும் உண்டான மாறுதல்களை நன்கு விளக்கும் படங்களும் பிற பொருள்களும் இருந்தன. இந்திய வரலாற்றுக்கு முற்பட்ட ஹாரப்பா, மோகன் . சோதரோ போன்றவற்றின் குறிப்பும் விளக்கமும் இருந்தன. இவற்றுள் பல பிற இடங்களில் காணாதவை. எனவே அப் பொருட்காட்சி அமைப்பாளரைப் போற்றி அறைக்கு வந்தேன். இரவு பல்கலைக்கழகத்தே பயிலும் தமிழ் மாணவர் களுக்குப் பேராசிரியர் வைத்துள்ள விருந்துக்கு வரச் சொன்னபடி, மாலை 6.30க்கு அந்த இந்திய உணவுச் சாலையைச் சென்றடைந்தேன். பத்து மாணவர், இரு ஆசிரியர், நான், அலுவலகச் செயலர் ஆகியோர் கலந்து கொண்டோம். சிறந்த முறையில் உணவு பரிமாறப்பட்டது. அதில் வடமொழி, மலையாளம், தெலுங்கு, தொல்லியல் (Anthropology)ஆகியவை பயில்கின்ற மாணவர்கள், கூடவே தமிழும் பயில்வதால், உடன் வந்திருந்தனர். சங்க இலக்கி