பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால்டிமோர் 26-4.85 169 அங்கேயே இருக்குமாறும் சொன்னார்கள். அப்படியே இரண்டொரு நிமிடத்தில் திரு. பெரியசாமி அவர்கள் தம் பெருங்காரில் வந்து இறங்கினார்கள். நான் அவர்களே நேரில்வருவார்களென எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு உள்ள பலவேளைகளில்-ஊரில் இல்லையோ எனவும் நினைத்தேன். அவர்களே வந்தமை கண்டு அவர்தம் அன் பினை உளமாரப் போற்றினேன். என் சாமான்களை அவர் களே எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டு என்னையும் உட்காரவைத்து நெடுந்தெரு வழியாக விரைந்து சென்றனர். செல்லும்போது இந்நகர் அமைப்பினைப் பற்றியும் ஊருக்குள் செல்லாது, புற நகர்ப்பாதை வழியாகச் செல்வதாகவும், அவர்கள் தங்கும் இடம் (Mary Land) புறநகர்ப்பகுதியாக உள்ளமையின் நகர நெருக்கடியின்றி எளிதாகச் செல்ல முடியும் என்றும் கூறினர். இங்கே எல்லா நகரங்களிலுமே நெடுஞ்சாலைகள் ஊருக்குச் செல்லா வகையில் புற நகர்ச் சாலைகள் இடப் பெற்று, ஊரில் செல்லத் தேவையற்றவர் கள் நேராகவே விரைந்து செல்ல வழி செய்துள்ளனர். வீடு செல்லுமுன் பல்வேறு (வழியிலுள்ள) நிலையங்களையெல் லாம் விளக்கிச் சென்றனர். அவர்தம் தமிழ்ப்பணி பற்றியும் இனிச் செய்யவேண்டிய பணிகள்பற்றியும் தாம் புதிதாக வாங்கியுள்ள வீட்டிற்குப் பெயர்வைப்பது பற்றியும் பேசிக் கொண்டு வந்தார்கள். இதுவரையில் நான் நகர்களின் நடுவிலேயே தங்கியிருந்த நிலைமாறி, இன்று புற நகரிலேஅழகான இயற்கைச் சூழலில் தங்கியிருக்கும் நிலை கண்டு மகிழ்ந்தேன். தம் பக்கத்திலே உள்ளவர்களும் தமிழர்களே என்றனர். மகிழ்ந்தேன். வெளிநாடுகளில் தமிழர்கள்நம்மவர் இவ்வாறு புறநகர்ப் பகுதிகளில் சொந்த மாளிகை கள் அமைத்துச் சிறக்க வாழ்வது மகிழ்ச்சிக்குரியதல்லவா! எனவே இவர்தம் வாழ்வும் வளமும் மேலும் சிறக்கவேண்டு மென்ற உள்ளத்து நல்வாழ்த்தோடு அவர்தம் மனை புகுந் தேன். - . . . - மனை தூயதாகவும் தேவையான வசதிகளோடும் இருந்தது. அம்மையார் குழந்தையைப் பள்ளியிலிருந்து