பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அழைத்துவரச் சென்றிருந்தனர். நான் தனி அறையில் இருந்தேன். அவர்கள் தம் அலுவல்களைக் கவனிக்கச் சென்றனர். அதற்குள் அம்மையார் குழந்தையை அழைத்து வந்தனர். மூன்று வயது நிரம்பாத இளங்குழந்தைகுழந்தைப் பள்ளியில் விளையாடி வந்தது. என்னிடம் அன்புடன் பழகிற்று. அம்மையாரும் அவருக்கு ஏற்ற மனைக் கிழத்தியாக இருந்து, அவருடைய பணிகளுக்கு உதவியாக இருந்தார்கள். (அவர்களும் பணி செயகிறார் கள்: இன்று விடுமுறையாதலால் வீட்டில் இருந்தனர்). பின் 1 மணி அளவில் மற்றொரு பள்ளியில் (Montisori) பயிலும் குழந்தையை அழைத்துவர அவர் காரில் புறப்பட்டார்: என்னையும் அழைத்துச் சென்றார். பள்ளி ஒரு மலைச் சரிவில் கிறித்தவர்களால் நடத்தப் பெறுவதாகும். இங்கும் பெற்றோர்களே குழந்தைகளை அழைத்துவந்து அழைத்துச் செல்லவேண்டும். அந்த வகுப்பிற்குரிய ஆசிரியர்கள் (பெண் களே ஆசிரியர்க்ள்) அவரவர் குழந்தைகளுடன் இருந்து, பெற்றோர்கள் வந்தவுடன் ஒப்படைத்த பிறகே செல்ல வேண்டும். நாங்கள் சென்றவுடன் அந்தக் குழந்தைக்குரிய ஆசிரியை வந்து குழந்தையின் பெயரைச் சொல்ல, உடன் அழைத்துவந்தார். புறநகர்ப் பள்ளியாதலின் பெரும்பாலும் கார் உடையவர்களே இங்கே பிள்ளைகளைச் சேர்த்துள் ளனர். எனவே நிறைய வண்டிகள் நின்றிருந்தன. பிள்ளை கள் விளையாடு மிடமும் தூய்மையாகவும் செம்மையாகவும் இருந்தது. சில வகுப்புகள் மரத்தடியிலும் இருந்தன. இன்று நல்ல வெய்யில் இருந்தமையின் பிள்ளைகளை வெளியில் ஒடியாடி விளையாடவிட்டிருந்தனர். அப் பள்ளியில் பயில ஒராண்டுக்குக் குறைந்தது 3000 டாலர் (சுமார் 40,000 ரூபாய்) செலவாகும் என்றனர். இங்கே எல்லோருமே உயர் நிலையில் உளமையின், இது பலருக்குப் பெருந்தொகை யாகத் தெரியாது. பள்ளி மலைச்சரிவில் இருந்தமை போன்றே, இப்புறநகரே பெருமலை இன்றேனும்-சிறு உயர முள்ள சரிவுகளிலே இருப்ப தறிந்தேன்.