பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கொண்டு திண்டாடும் நிலை இங்கே இல்லை. இது தலை நகராயினும் நாட்டின் 9 (அ) 10வது பெருநகராகத்தான் உள்ளது. இங்கே உயரிய 20, 30 அடுக்கு மாளிகைகளும் கிடையா. அரசாங்கமே உயரத்தை வரையறுத்துள்ளது. நகர்ப்புற எல்லையில் ஓரிரண்டு தவிர்த்து, நகர எல்லையில் அனைத்துமே எட்டு மாடிகளுக்கு உள்ளாகவே உள்ளன. எல்லா நாட்டுத் தூதரகங்களும் இங்கே உள்ளன. இந்திய நாட்டுத் தூதரகத்தைக் கண்டேன். பல்வேறு நினைவுச் சின்னங்கள் ஆங்காங்கே எழுப்பியுள்ளனர். உயரிய வெற்றித் தூண் ஒன்றும் நகர் நடுவே அமைக்கப்பெற்ருந்தது மறைக் கப்பெற்ற கென்னடியின் பெயரால் விமானநிலையம் நியூயார்க்கில் அமைந்ததை மேலே காட்டினேன். இங்கே மிகப் பெரியதாகிய ஒரு கலை அரங்கம் அவர் நினைவாகக் கட்டியுள்ளனர். மூவாயிரம் பேர் இருந்து கேட்கக் கூடிய வகையில் அது அமைக்கப்பெற்றுள்ளது. இன்று ஞாயிறு ஆனமையாலும் நிகழ்ச்சிகள் ஒன்றும் இல்லையாதலாலும் அது மூடியிருந்தது. எனினும் புறத்தோற்றத்தையும் அதன் அழகிய வாயில் முகப்பையும் கண்டு மகிழ்ந்தேன். நாட்டுத் தலைவர் அலுவலகமாகிய வெள்ளை மாளிகை (White House) யினைக் கண்டேன். இருபுறத்தும் உயரிய பெருங்கட்டடங்கள் அரசாங்க அலுவலகங்களாக அமைய, இடையில் இந்த வெள்ளை மாளிகை இருந்தது. இதன் எதிரில் சாலைக்கு மறுபக்கத்தில் யார்வேண்டுமானா லும் எந்தவகையாலும் அரசாங்கக் கொள்கை, செயல் முதலியவற்றிற்கு மாறுபாடு தெரிவிக்க வசதி செய்திருந்த னர். கோஷங்கள் இடலாம்; பெரும் சுவரோட்டிகள், அட்டைகளில் ஒட்டிப் பிடிக்கலாம், வேறு வகையிலும் மாறுபாட்டினைக் காட்டலாம். ஆனால் அந்தச் சாலைக்கு மறுபக்கம் வரக்கூடாது. இந்த வகையில் இன்றும் பலர்நின்று கொண்டு, ஏதோ எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்த னர். இது தவிர வேறு இடங்களில் மாறுபாட்டு ஆர்ப்பாட் டங்களும் ஊர்வலங்களும் கூடாது என்பதையும் கூறினர்.