பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் (Computer) போன்றவை பற்றிய அடிப்படைக் கல்விகளைக் கற்க வாய்ப்பு உண்டு. இந்தப் பிள்ளை பயிலும் பள்ளி மட்டுமன்றி எல்லாப் பள்ளிகளிலும், ஒவ்வொரு குழந்தைக் கும் தனிச் செயல்முறை (Project) உண்டாம், ஆண்டுக்கு Breiro 'Qpop u(50s; GAffo (Semester System Exami nation) உண்டு. ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு பொருள் பற்றிக் குழந்தைகள் சிறந்த முறையில் ஆய்வு நடத்துதல் வேண்டும். குழந்தைகள் வகுப்பிலேயே (L.K.G., U.K.G.) (சிலவிடங்களில் ஒரே குழந்தைகள் வகுப்பு உள்ளது என்கின்றனர்) இந்த முறை கையாளப் பெறுகின்றது. இக் குழந்தை U.K.G. வகுப்பில் படிக்கும்போது உருளைக் கிழங்கிற்கு உயிர் உண்டா? என்று ஆய்வு செய்த தன்மை அறிந்தேன். அதை வெட்டி ஒரு பகுதியினை வேகவைத்து, மறுபகுதியினை அப்படியே வைத்து, இரண்டிலும் தண்ணிர் ஊற்றினால் வேகவைத்த பகுதி நீரை உட்கொள்ளாது நிற்க, முதல் பகுதி, நீரை உட்கொண்டதைக் கண்டு, அதனால் வெந்தபின் அதன் உயிர்ச்சத்து நீங்கியது அறிந்து உருளைக்கு உயிர் உண்டு என்று நிருபித்த தன்மை அறிந்து வியந்தேன். பெரிய விஞ்ஞானிகளும் காணமுடியாத இந்த நுண்ணிய கருத்தின்ை நான்கு வயதுக் குழந்தையை அறிய வைத்த திறன் நினைந்து மகிழ்ந்தேன். (பெற்றோர் இந்த ஆய்வு களில் உதவுகின்றனர்; ஆனால் தாங்களே எல்லாவற்றையும் செய்து கொடுத்துவிடுவதில்லை, நம் நாட்டில் சில பெற்றோர் செய்வது போல). எனவே இங்கே பயிலும் குழந்தைகள் - அரசாங்கப் பள்ளியாயினும் தனியார் பள்ளி யாயினும் இளமையிலேயே அறிவுத் திறன் பெறுகின்றனர். பின் வாழ்வில் சிறக்க இது வழி செய்கின்றது. இவ்வாறே பிற வகுப்புகளில் செய்த ஆய்வுகள் சிலவற்றைக் குறித்துத் தந்தனர். இதோ அவர்கள் தந்தவை. . 1. How fast do you fall in air and liquid? 2. How do you stop pollution, 3. The origin of the bicicle