பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II யின் எல்லாப் பகுதிகளும் சிறக்காதா? பள்ளிகளிலும் பிற பொதுவிடங்களிலும் தூய்மையும் செம்மையும் போற்றப் பெறுகின்ற நில்ையினைப் பலவிடங்களில் காட்டி யுள்ளேன். அதற்கெல்லாம் காரணம் அரசாங்கத்தின் திட்டமான ஆணையும் அவற்றை மதிக்கும் மக்களுமே. நம் நாட்டு மக்கள் நிலை? கல்வியிலும் இந்த நிலை காண முடிகின்றது. நம் தமிழகத்தில் ஆறு வகைக்கு மேற்பட்ட பள்ளிக் கல்வி உள்ளது. மக்களை ஒன்று படுத்த வேண்டும் என்று அன்று தொட்டு இன்றுவரை அரசியலாளர்களும் அறிஞர்களும் பிறரும் பேசியும் எழுதியும் வந்தும், இவ்வாறு கல்வியாலே இல்லாத புது ஏற்றத் தாழ்வை உண்டாக்குவானேன்? தமிழ் பயிற்சி மொழி என்று சொல்லிக் கொண்டே, பணம் உள்ளவர் ஆங்கிலப் பயிற்சிப் பள்ளிகளில் சேர, மாநில, மைய அரசுகள் போட்டியிட்டுக் கொண்டு, ஆங்கிலப் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்குவது ஏனோ? இவற்றால் மக்களிடை பிளவு வளர்ந்து வருவதைக் கண்டும் மேலும் மேலும் அத்துறைகளை வளர்பது வருங் கால நாட்டுக்குப் பொருந்தாது. இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டுவது நல்லவர் செயலல்லவா! தமிழ்நாட்டில் தமிழ்மட்டும் பயின்றவர் உயர்பதவி பெறமுடியாது. உலக அரங்கிலே மிக முன்னேறியுள்ள ஜப்பானிலே கல்வித் துறை உயர் அதிகாரிகள் (Director, Deputy Director) ஜப்பான் மொழி மட்டும் அறிந்தவர் களாக உள்ளனரே. அங்கே 99.9%கற்றவர் இல்லையா? உலகெங்கும், நம் அண்டை நிலமாகிய கன்னடம் உட் பட அவ்வந்நாட்டு மொழியினைக் கட்டாயம் படிக்க வேண்டும் என வற்புறுத்த - செயலாக்க - தமிழ் நாட்டில் மட்டும் தமிழ் பயில்ாமலேயே எத்தனை உயர் பட்டங்களும் பெறலாமே. இது நல்லதா என எண்ணிப் பார்க்க வேண்டாமா! தமிழ் மட்டும் அறிந்தவர்களை உயர்பதவிகளில் அமர்த்த வேண்டாமா! சிங்கப்பூர் மலேயா முதலிய இடங்களில் தமிழுக்கென்றே தனி ஒலி பரப்பு விடியற் காலை முதல் நடு இரவு வரையில் உள்ளது. அதிலே வேற்று மொழியோ வேறு நிகழ்ச்சிகளோ விரவு