பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் உள்ளனர்.என்றும் கூறினர். இறைவனுக்கு நாள்தொறும் விழா ஆற்றி முடிவில் வழங்கும் பலவகைப் பிரசாதங்கள்' நம் ஊர்க் கோயில்கள் உள்ளதைக்காட்டிலும் மிகவும் சிறந்தவையாகவும் சுவையாகவும் இருக்கும் என்றனர். இளம் பிள்ளைகள் தோற்றம் அக்கோலத்தில் நெஞ்சங்கவர் வகை யில் அமைந்துள்ளது என்று கூறி. என்னை எப்படியும் அந்த நகரைச் சென்று காணுமாறு கூறினர். நானும் நான்கு நாள் "பிட்ஸ்பர்க்"கில் தங்குவதால் ஒருநாள் அங்கே சென்று வர நினைத்தேன். (பிட்ஸ்பர்க்கில் பெருமழை காரணமாக அங்கே செல்லமுடியவில்லை.) * மாலையில் திரு. பார்த்தசாரதி (மாமனார்) அவர் களுடன் சுற்றி உலாவரப் புறப்பட்டேன். தங்கியிருந்த இடத்தினைச் சுற்றி நான்கைந்து தெருக்கள் நடந்தோம். பல சமய விடயங்கள் மட்டுமன்றிச் சமுதாய விடயங்களையும் அலசிப் பார்த்தோம். அவர் பதின்மூன்று வருடங்களாக இங்கே வந்துகொண்டிருப்பவராதலால் பலவிடங்களை விளக்கினார். தெருவுதொறும் வீட்டுக்கு வீடு வீதியை ஒட்டித் தபால் பெட்டிகள் (பூட்டுடன்) வைக்கப்பெற்றிருந் தன. அஞ்சல் தருபவர் (Post man) காரிலேயே வருவாராம். அப்படியே அந்தப் பெட்டிகளைத் திறந்து அவரவர்க்குரிய அஞ்சல்களைப் போட்டுச் செல்வாராம். பின் வீட்டுக்குரிய வர் திறந்து, உள்ளதை எடுத்துக் கொள்வாராம். பதிவு போன்றவற்றைத்தான் நேரில் தருவாராம். சிலவிடங்கள் பதிவு வந்துள்ளது என்ற குறிப்பு பெட்டியில் இருக்கும். அவர்களே அஞ்சலகம் சென்று வாங்கிக் கொள்ளவேண்டும். அஞ்சல்துறை கடைநிலை ஊழியர் மட்டுமன்றி, வீட்டு வேலைகளைச் செய்யும் மகளிரும் காரிலேயே வருகின்றனர். வீடு சாமான்கள் துப்புரவு செய்தல்(பெரும்பாலும் மின் உதவி யினாலேயே) போன்ற நாளைக்கு ஒருமணி நேர வேலைக்கு 40 (அ) 50 டாலர் கூலி கேட்கின்றனர். (சுமார் 500 ரூபாய் ஒரு நாளைக்கு) இதையெல்லாம் நம் நாட்டில் எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை. அதனாலேயே எல்லா வேலை களையும் இங்கே அவரவர்களே செய்து கொள்ளுகின்றனர்.