பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் செம்மையாகச் செய்தும், பிற பாடங்களை முற்றும் (ஆசிரியர் சொல்லித் தந்தோ. அன்றியோ) செம்மையாக அறிந்தும் சிறக்க வரும் ஒரு சில பிள்ளைகளை - பல்வேறு சூழல்களுக்கிடையே தக்கவாறு பயன்பெறும் பிள்ளைகளைப் போற்றாதிருக்கமுடியவில்லை. ஆரம்பப்பள்ளியில் காட்டும் அதே ஆர்வம்-மாணவர் ஆசிரியர் தொடர்பு-ஆய்ந்து உணரும் நிலை-உயர்நிலைப்பள்ளியிலும் அமையுமாயின் நாட்டின் கல்வி சிறக்கும் என்பது துணிபு. கல்லூரி, பல்கலைக்கழகங்களைப் பற்றி முன்னரே பிளடல்பியாவில் உள்ள நிலையினை ஒருவாறு காட்டினேன். பல்வேறு துறைகளில் பாடப் பிரிவுகள் அமையினும், மாணவர் தாமே முயன்று சம்பாதித்துப் படிப்பதால் சிலர் முயன்று தெளிந்த அறிவு பெறுகிறார்கள் என்றாலும், சிலர் எங்கோ சென்று கொண்டிருக்கிறார்கள் என எண்ண வேண்டியுள்ளது. ஆனால் அதே வேளையில் ஒரு சிலர் - சில நல்ல ஆய்வு அரங்கங்களில் பங்குகொண்டு பயன்பெற்று, சிறக்க வருங்காலத்தில் நாட்டு நலனின் அக்கரை காட்டி உழைக்கிறார்கள் என்பதையும் எண்ண வேண்டியுள்ளது. இந்திய நாட்டுப் பிள்ளைகளுக்கு, அந் நாட்டு மொழி, கலை, பண்பாடு முதலியவற்றைப் பயில்வதற்கு, இந்நாட்டுக் கல்வி முறையில் இடமின்றேனும் சிலர் தனித்த முறையில் அவற்றைப் போற்றி வளர்க்க - ஆம் - நிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டாயினும் . முயன்று வாரந்தொறும் வகுப்பு கள் நடத்துகிறார்கள். இந்தியர் வீடுதோறும் கலையரங்கம் உண்டு. இங்கேயும் அத்தகைய கலைப்பள்ளி ஒன்றினை ஒரு வடநாட்டுப் பெண்மணி சிறக்க நடத்துகிறார்கள் என அறிந்தேன். அது விடுமுறை நாட்களில் - சனி ஞாயிறுகளில் நடைபெறுவதால் . நான் நாளை மாலையே பிஸ்ட்பர்க்' செல்வ தால் அதைக் காணமுடியவில்லை. பிற இருப்பின் நானை 'பிட்ஸ்பர்க் எழுதுவேன். மே மாதம் பிறக்கிறது.