பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ig தல் இல்லை. அப்படியே தொலைக் காட்சிகளிலும் தமிழக்குத் தனி இடம் உண்டு. தாயகமான தமிழ் நாட்டில் அந்நிலை வருதல் வேண்டுமன்றோ! இதல்ை பிறமொழிகளோ ஆங்கிலமோ வேண்டாம் என்பதன்று. உறியதற்கு உரிய இடம் தரவேண்டும் என்பது கருத்து. கைத்தொழில் துறையிலும் எத்தனை வகையில் நாம் முன்னேற வேண்டியுள்ளது. நம் சென்னையைக் காட்டிலும் மிகச் சிறியதான ஆங்காங் தீவில் நூற்றுக் கணக்காக மின் அணுத் (Electronic) தொழிற் சாலைகள் அமைத்து, எவ்வளவு குறைந்த வகையில் எண்ணற்ற பொருள்களைத் தயார் செய்கின்றனர். மேலை நாடு களிலும் பிற நாடுகளிலும்தான் தொழிற் சாலைகள் எப்படி வளர்ந்துள்ளன. அதற்காக, நாம் சிலரைப்போல, அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தொழில் வளர்ச்சின்ய மேற் கொள்ள வேண்டாம். மக்கள் வாழ்வுக்குத் தேவையான, ஆக்கப் பணிகளுக்கு வேண்டிய ஆயிரம் ஆயிரம் தொழிற் சாலைகள் செயல்படலாமே. அமெரிக்க நாட்டில் உள்ளமை போன்று பெரிய தொழில் நிறுவனங்கள் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்களை ஊக்கும் வகையில் பொருள் உதவி செய்து, தத்தம் துறைக்கு ஏற்ற ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர் கள் படிப்புச் செலவை ஏற்று, பின் தத்தம் நிறுவனங்களில் இணைக்க் வக்ை காணலாமே. அரசாங்கத்துக்கும் செலவு குறையுமே! அனைவரும் விரும்பினால் தொழில் தொடங்க வாய்ப்பளிக்க வேண்டும். அதே வேளையில் நகர் வாழ்விடங்களில் தொழிற் சாலைகளை அமைத்து மக்க்ள் ந்ல்னைக் கெடுக்கா வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். போபால் சம்பவம், இன்னும் நம் நாட்டிற்கு நல்ல வழி காட்டவில்லையோ என எண்ணு கிறேன். பல தொழிற்சாலைகள் - கழிவுப் பொருளும் நச்சுக் காற்றும் வெளியே வராத வகையில் ஏற்பாடு செய்ய, அத்தொழிற்சாலைகளை வற்புறுத்த வேண்டும். இவையெல்லாம் பிறநாடுகளில் முடியும்போது நம் நாட்டில் ஏன் முடியாது? நான் பலவிடங்களில் நூலுள் காட்டியபடி, நம் பணத்தால் - இலட்சலட்சமாக நாம் செலவிட-அவற்றால் பட்டம் பெறும் நல்லறிஞர்கள்