பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 208 ஏழு நாடுகளில் எழுபதுகள்ட்கள் சொந்த வீடு என எண்ணும் இடம் இவருடைய வீடு. என்னை முதலில் காரில் வீட்டிற்கு அழைத்து வந்தவுடன், உள்ளே புகுந்ததும் 'இது உங்கள் வீடு' என்றனர். எனக்குப் பாரதக் கதை நினைவுக்கு வந்தது. கண்ணன் தாது நடந்து அத்தினா புரம் வந்தபோது ஒவ்வொரு வீடாகக் கண்டு, இது யாருடை யது?,இது யாருடையது? என்று கேட்க, ஒவ்வொருவர் பெயர் சொல்ல விதுரன் மனைக்கு வந்தபோது அதே கேள்விக் கு விதுரன் இது தங்களுடைய வீடு-கண்ணன் வீடு' என்று கூற, " அப்படியா; எனக்கும் இங்கே ஒரு வீடு இருக்கிறதா?’ என்று கூறி அங்கே தங்கினார் என்பது கதை. கதை இன்று வாழ்வில் கண்ட ஒன்றாகியது. மற்றும் அவர்கள் என்பால் காட்டிய அன்பு தலைநாள் போன்ற தனியன்பு' என்றும் மறக்கக் கூடியதன்று." திரு. சதானந்தம் அவர்கள் தம் தம்பியார் ஒருவரையும், மனைவியின் தம்பி, அவர் மனைவி, ஆகியோரையும் உடன் வைத்து ஆதரிக்கின்ற நிலை கண்டு அவர்தம் சுற்றம் தழுவும் திறன் அறிந்து மகிழ்ந்தேன். அவர்களில் பலரும் பன்னிசெய்யப் பெறுகின்றவர்களாயினும், அவர்களிடமிருந்து செலவுக்கு எந்தத் தொகையும் பெருமலேயே, தம் செலவிலே அனைவரையும் புரக்கின்றார் என்பதறிந்தேன். இத்தகைய் ஒரு நல்ல குடும்பத்துடன் பழகிய தன்மையினை எண்ணிக் கொண்டே, இன்று பிற்பகல் 4 மணிக்கு விடைபெற்றுக் கொண்டு விமான நிலையத்துக்கு, "பிட்ஸ்பர்க்'செல்வ தற்காகப் புறப்பட்டேன். திரு. சதானந்தம் அவர்கள் என்னைத் தம்காரில் விமான நிலையம் அழைத்து வந்து வழியனுப்பினார். அவர்தம் மாமனாரும் உடன் வந்து வழி. அனுப்பி வைத்து வாழ்த்து கூறினார். பிட்ஸ்பர்க் வந்து விமானநிலையத்தில் இறங்கியதும் திரு. டாக்டர். வள்ளியப்பன் அவர்கள் வந்து காத்திருந்து என்னை அழைத்துச் சென்றார். விமானநிலையத்திலிருந்து அவர் வீடு 40 கல். எனினும் உரிய வேளையில் வந்து அழைத்துச் சென்றமை ஆவர்தம் அன்பினைக் காட்டுகிறது.