பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க் 1-5-85 209 விமான நிலையத்தில் இறங்கியதும் மழை என்னை வர வேற்றது. வழி நெடுகத் தூறல் இருந்தது. பல மலைகளுக் கிடையில்-குன்றுகளில்மேல் இந்நகர் இருந்தது. நம் நாட்டுத் திருப்பதி போன்றே மலைச்சரிவுகள் காட்சி தந்தன. திரு. வள்ளியப்பன் நம் செட்டிநாட்டுக் கோனாப்பட்டியைச் சேர்ந்தவர். இங்குத் தனிப்பட்ட முறையில் மருத்துவராகப் பணியாற்றுகின்றார்.இந்த நகரமே இரும்பு நகரம் எனப்பட்டு சென்ற பெரும்போரில் போர்த் தளவாடங்கள் அனைத்தை யும் செய்து தந்ததாம். இங்கும் இடையில் ஒரு பேராறு ஒடு கிறது: கப்பல் போக்குவரத்தும் உண்டு; நிலக்கரி, இரும்பின் மூலப்பொருள்களை அவை ஏற்றி வருகின்றன. இடையில் மலையைக் குடைந்து ஒரு கல்லுக்கு மேலாகச் சாலை அமைத்து, நகரின் இரு பக்கங்களை இணைத்துள்ளனர். காடுகள் இடையிட்ட மரங்களை அரசாங்கத்தார் யாரும் வெட்டாமல் பாதுகாக்கின்றனர். இங்கே விறகு பயன்பட வில்லையாதலால் அதை யாரும் தொடுவது இல்லைபோலும். நகரின் பல தெருக்களையும். அவற்றின் அமைப்புக்களையும் காட்டிக் கொண்டே, அன்பர் வள்ளியப்பன் அவர்கள் மலை களுக்கு நடுவில் அமைந்த அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்தம் துணைவியாரும் பிள்ளைகளும் அன்புடன் வரவேற்றனர். அவர்தம் மனைவியாரின் பாட்டனார் எனக்கு அரை நூற்றாண்டு முன் அறிமுகமானவர். அவர்கள் நடத்திய சிவநேசன்' என்ற இதழில் அப்போது (1931-33) நான் சில பாடல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளேன். எல்லாத் தகவல்களையும் நியூயார்க் திரு. மணி அவர்கள் தொலைபேசிவழி இவர்களுக்குச் சொல்லியுள்ள்ார்கள். அவர்கள் ஐயா'வுடன் (பாட்டனாரை 'ஐயா என அழைத் தல் செட்டி நாட்டு மரபு) பழகிய காரணத்தால் என்னிடம் அவர்கள் மிக அதிகமான அன்பு காட்டி உபசரித்தார்கள். உணவுக்குப் பின் இவ்வூர்க் கல்வியைப் பற்றிக் கேட்டேன். அவர்களே குடும்பமாகவே-ஒரு கல்விச்சாலையில் தொடர்பு 14 سده gr