பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நிலக்கரி அதிகமாக உள்ளமையின் இரும்புத் தொழிற்சாலை கள் - உருக்கு, தளவாடங்கள், போர்க்கருவிகள் முதலியன செய்யும் தொழிற்சாலைகள் இங்கே அதிகமாக உள்ளன என முன்னரே சுட்டியுள்ளேன். அவற்றின் உள்புகுந்து ஒவ்வொன்றையும் நுணுகி ஆராயும் திறன் எனக்கு இல்லை யாதலாலும் நேற்றெல்லாம் மழையாகவும் இன்று மிக குளிராகவும் உள்ளமையாலும் அவற்றைச் சென்று உட்புகுந்து காணமுடியவில்லை. எனினும் காரிலேயே இருந்து அவை இயங்கும் இடங்கள், சுற்றுச்சார்புகள், செயல்முறைகள் முதலியனபற்றி ஒருவாறு அறிந்தேன். இங்கே கண்ணாடித் தொழிற்சாலைகளை - நாட்டில் மட்டுமன்றி உலகில் இயங்கும் சாதாரணக் கண்ணாடி முதல் உயர்ந்த தொலைநோக்குக் கண்ணாடி (lence) வரையில் செய்யும் தொழிற்சாலைகளை இயக்கும் அலுவலகங்களும் நுண் ஆய்வு கண்டு பல புதியன புகுத்த முயலும் ஆய்வுக் களங்களும் உள்ளன. மேலும் ராக்கெட் என்னும் விண்வெளிக் கப்பல்கள் போன்ற அனைத்தையும் செய்ய உதவும் அலுவலகமும் இங்கேயே உள்ளது. எலெக்ட்ரானிக் சம்பந்தமான பல தொழிற்சாலைகள் - நம் சதுரங்கப்பட்டி னத்து அருகிலிருக்கும் கல்பாக்கம் நிறுவனத்தைக் காட்டிலும் நூறு மடங்குக்கும் மேற்பட்ட நுண் தொழிற் சாலைகளும் இங்கே உள்ளன. இவை அனைத்தும் தனியார் நிறுவனங்களே; அரசுக்குத் தேவையானவற்றை உடனுக் குடன் தவறாது செய்து தருகின்றன. அரசு வேறு தாம் வேறு என்ற உணர்வு இவர்களுக்கு என்றும் இருந்ததில்லை. 'இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன? நாம் வாழ்ந்தால் போதும் என்று ஆளுபவரைக் கைகட்டிப் போற்றும் வழக்கமும் இங்கில்லை. யார் ஆண்டாலும் நாடு நம்மது என்ற உணர்வில் அனைவரும் செயலாற்றுகின்றமை யின், நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியிலிருப்பினும், நாட்டின் தேவையை அறிந்து ஒவ்வொருவரும் தொழிற்படுகின்றனர். எனவே பல தனியார் நிறுவனங்கள் தழைக்கின்றன. அஞ்சல்துறை ஒன்றைத் தவிர, தொலைபேசி, விமானம்,