பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க்.2-5.85 221 போக்குவரத்து, தனிப்போக்குவரத்தாகிய இரெயில் முதலிய அனைத்தும் தனியார் கையில் உள்ளமையின் நாட்டுத் தொழில்வளம் நன்கு சிறக்கிறது. அப்படியே நூல்களைப் பலர் அச்சிடுவதால் பள்ளிகளில் நல்லன தேர்ந்தெடுத்துப் பிள்ளைகளுக்கு அறிவூட்டும் நிலையும் அமைகின்றது. இத்தகைய பல்வகைத் தொழில்வளம் அமைந்த நகரின் நடுவில் பேராறும் வற்றாது . கப்பல் செல்லும் வகையில் ஒடுகின்றமையின் மூலப்பொருள்களும் எளிதில் வந்து சேருகின்றன. ரெயில்களும் கொண்டு வருகின்றன. ஒரு ரெயில் சுமார் 60 (அ) 70 பெட்டிகளில் நிலக்கரி தாங்கி நகர முடியாது நகர்ந்து - ஊர்ந்து செல்லும் காட்சியினைக் கண்டேன். இத்தகைய தொழிற்சாலைகளில் நம் நாட்ட வர், தமிழர், தெலுங்கர், கன்னடத்தார் பலர் இடம்பெற்று நல்ல பதவிகளில் உள்ளனர். இந்தத் தொழிற்சாலைகளையெல்லாம் கண்டுகொண்டு மெல்ல மாலை 6.30 மணிக்கு வேங்கடவன் கோயிலை அடைந்தேன். வானத்தில் நேற்று குமுறிக்கொண்டிருந்த மேகத்தின் சாயல் துளியும் இல்லை. ஒருபுறம் சந்திரன் - குன்றுகளுக்கிடையில் கோவர்த்தனனாகிய தி ரு மா ல் கோயில் வெளியிலிருந்து நாற்புறமும் சுற்றி நோக்கினேன். குளிர் சற்றே அதிகமாக இருந்தபோதிலும், அந்த இயற்கைச் சூழல் என்னை மறக்க வைத்தது. திருப்பதியை ஒட்டிய அத்திருமாலின் உருவம் - தோற்றம் - வண்ணம் இதுதான் என உணர்த்தி நின்றது. மெல்ல 7 மணிக்குக் கோயிலுள் புகுந்தேன். இன்று 'நரசிம்ம ஜயந்தி. எனவே சிறப்பு விழா இருந்தது. இறைவனையும் அம்மையையும் ஊஞ்சலில் அமர்த்தி, பக்கத்தில் நரசிங்கப்பெருமானையும் இருத்தி வழிபாடாற்றினர். முறையான பூசையினை அமைதியாக இருவர் செய்து முடித்தனர். மந்திரங்கள் முறையாகத் தவறு இன்றிச் சொல்லப் பெற்றன. இறுதியில் நம்மாழ் வார் திருப்பதிகம் ஒன்றையும் (பத்துப்பாடல்களும்)