பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்டன் 5.5-85 229 காலை வகுப்பு நடத்தச் சென்றிருந்த திரு. பவுத்ராஜி அவர் கள் வந்து, உணவில் எங்களுடன் கலந்துகொண்டனர். பின் 2 மணி அளவில் அனைவரும் (அவர்கள் அன்னை யாருடன்) ஒரு நூல் நிலையம் சென்றோம். அங்கே கீழ் உள்ள தனிமையான-அமைதியான அறையில் வேறு சில அன்பர்களும் இருந்தனர். அங்கே உபநிடத வகுப்பு நடைபெற்றது. திரு. சர்மா அவர்களும் அவர்தம் தங்கை யைப் போன்றே சமய இலக்கியங்களின் சிறந்த அறிவு பெற்றிருந்தமை அறிந்தேன். 2.45க்கு ஆரம்பித்த வகுப்பு 4-15க்குத்தான் முடிவுற்றது. ஒரு சிலரே வந்திருந்தாலும் அனைவரும் ஆழ்ந்த பக்தியும் அறியவேண்டும் என்ற அவாவும் கொண்டவர். எது அறம் (தர்மம்) என்ற ஆராய்ச் சியில் அனைவரும் பங்கு கொண்டு விவாதித்தனர். சமுதாய பழக்கவழக்கங்கள் நாடுதோறும் மாறினாலும் அடிப்படை அறமாகிய எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது' என்ற உண்மையினைப் போற்றி வழக்கத்தில் கொள்ளவேண்டிய முடிவினைக் கண்டனர். அமைதியான வழிபாடு என் உள்ளம் கவர்ந்தது. கூட்ட முடிவிற்குப்பின் காரிலேயே என்னை அழைத்துக் கொண்டு பாஸ்டன் நகர் முழுவதையும் சுற்றிக் காட்டினர். இந்நாட்டு மக்கள் எங்கும் இருப்பது போன்று இங்கும் தம் மனம் போன வாழ்வில் மகிழ்வதைக் கண்டேன். அது அவர்தம் நாகரிகம்; எனவே அதுபற்றி நான் என்ன கூற முடியும்? இங்கே உள்ள மிகப் பழைய ஹார்டுவேர்டு' பல்கலைக்கழகத்தினையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தினையும் கண்டேன். எங்கும் கண்டமை போன்று இங்கும் பேராறு ஊரின் இடையே ஒடுகிறது. அதில் கப்பல் போக்கு வரத்தும் உண்டு. இது ஒரு துறைமுக நகரமாதலால் நிறைய வணிக வளம் உண்டு போலும். பேராற்றின் இரு பக்கங்களிலும் இரண்டு பல்கலைக் கழகங்களும் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன. அவற்றொடு தொடர்புடைய விடுதிகளையும் கண்டேன். இங்கே ஒரு புதுமை இருந்தது.