பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தனியாக வந்து பயில்பவருக்கே எங்கும் விடுதிகள் இருப் பதைக் காண்கிறோம். இங்கே பல்கலைக்கழகங்களை ஒட்டி அத்தகைய விடுதிகள் பல உள்ளன. அவற்றுடன் மணமானவர்கள் தங்கிப் படிக்க, குடும்பத்தோடு தங்குவதற் கென ஒரு தனி விடுதி (பத்தடுக்கு மாளிகை) இருப்பதைக் கண்டேன். இது எவ்வளவு போற்றுதற்குரியது. இத்தகைய விடுதி உள்ளதால், பல நாடுகளிலிருந்து மணமானவர்கள் இங்கே குடும்பத்தோடு வந்து, தங்கிப் பயில்கின்றனர். கணவன், மனைவி இருவரும் பயில்கின்ற குடும்பங்களும் உண்டு போலும். மேநிலைக் கல்விக்கு இத்துணை ஆக்கம் அளித்துள்ள தன்மையைப் போற்றினேன். • r இப்பல்கலைக் கழகங்கள் தொன்மை வாய்ந்தவை. ஹார்டுவேர்டு பல்கலைக்கழகம்பற்றி நம் நாட்டு மக்கள் நன்கு அறிவர். இதில் நோபல் பரிசு பெற்றவர் பலரும் ஆ ய் வு காண்கின்றனர். இப் பல்கலைக்கழகங்களிலும் இங்குள்ள நம் 1, 1. T. போன்ற M.I.T.’ எனும் பொறியியல்துறை, மின் அணுத்துறை முதலியன போன்ற வைகளிலும் ஆய்வு நடத்தும் . கல்வி கற்பிக்கும் - பெரு நிலையங்களும் உள்ளன. இவற்றொடு இணைந்த நூல் நிலையங்கள் இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்கு மாம். மாணவர் எப்பொழுது வேண்டுமாயினும் அங்கே சென்று பயில நல்ல வாய்ப்பும் உண்டல்லவா! நம் நாட்டில் கற்பன கற்று, சிறந்த ஆய்வு நடத்தும் விற்பனர் பலருக்கு அவர் விரும்பிய வகையில் பணி கொடுப்பதில்லை; மாறாக ஏதோ இயந்திர வகையில் செயலாற்ற ஆணைத் தரப்படுகிறது. எனவே நம் நாட்டுப் பல நல்ல அறிஞர்கள் வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது. படிக்கும் படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் நம் நாட்டில் யாதொரு தொடர்பும் இல்லையல்லவா! உதாரணமாக :M.Sc. பெளதீகம் அல்லது வேதியல் படிக்கின்ற மாணவர். முதல் நிலை பெறும் மாணவர் - வங்கியில் வேறு எழுத்தர் அல்லது கணக்கர் வேலைக்கு செல்லுவதைக் காண்கிறோம்.