பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்டன் 5-5-85 231 அதே வேளையில் அந்த்த் துறைகளில் வல்லவர் பள்ளி களுக்கோ கல்லூரிக்கோ வேறு ஆய்வுகாணும் களங்களுக்கோ கிடைப்பதில்லையே. இது அரசாங்கத்துக்கும் சமுதாயத் துக்கும் எவ்வளவு இழப்பு. இந்த நிலை மாறவேண்டும் என்று நான் முன் என் நூல்கள் இரண்டொன்றில் குறித் துள்ளேன். இங்கும் அதையே எண்ணினேன். இங்கே ஒரு துறையில் சிறக்கப் பயின்று தெளிவு காணும் மாணவர் அதே துறையில் மேலும் மேலும் ஆய்வு காண நிறைய வாய்ப்பு கள் உள்ளன. எனவே நம் நாட்டிலிருந்தும் பலர் இங்கே மேல்நிலைக் கல்வி பயில வந்துள்ளனர். பயின்றபின் பலர் இங்கேயே பணியேற்றுச் செயல்புரியத் தொடங்குகின்றனர். இது நம் நாட்டுக்கு எவ்வளவு இழப்பு என்பதை நம் அரசாங்கம் எண்ணிப் பார்த்ததுண்டா? இத்தகைய சிந்தனைகளுக்கிடையே இப் பல்கலைக் கழகங்களையும் தொழில் வளர்க்கும் பெருநிலையங்களை யும் (M.I.T.) கண்டுகொண்டே வந்தேன். M.I.T. என்பது plb Q& Giraparus syth olaiv.6). 915, Madras Institute of Technology என்பதாகும். அதற்கும் இதற்கும் தொடர் 19øva»av. @gi MASSACHUSETTS Institute of Technology யாகும். எனவே இதில் சிறக்கப் பயிலும் மாணவர்கள் வருங்காலத்தில் நல்ல வாழ்வினை உடையவர்களாகத் திகழ் கின்றனர். இந்த ஊரிலேயே இன்னும் பாஸ்டன் பல்கலைக் கழகம் என்ற ஒன்றும் மற்றொன்றுமாக இருவேறு பல்கலைக் கழகங்களும் உள்ளனவாம். பொதுவாக இங்குள்ள மாணவர்கள், (பிற பல்கலைக்கழகங்களை நோக்க) தத்தம் கல்வியில் கண்ணும் கருத்துமாயிருந்து, கற்பன கற்று, சிறக்க உயர்கின்றனர் என்றும் எனவே இந்நகரின் பழைய பல்கலைக்கழகங்களுக்கு உலகிலேயே ஒரு தனிமதிப்பு உண்டென்றும் இங்குள்ளவர்கள் பெருமையோடு சொல்லிக் கொள்வதில் பொருள் உண்டு என உணர்ந்தேன். விரைந்தோடும் பேராற்றங் கரையில், காரை விட்டு இறங்கிச் சிறிது உலாவினோம். இடையிலே ஒரு ஒட்டப்