பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்டன் 5.5-85 233 களைக் காணமுடியவில்லை. இந்தப் பகுதிக்கே ஆங்கிலேயர் முதன் முதல் வந்ததால் இதற்கு New England" என்றே பெயராம். இந்த மாநிலம் அதே பெயரில் புதிய இங்கிலாந்து' என இன்றும் வழங்கப்பெறுகிறது. இங்கும் சீனர் தனியாக வாழும் பகுதி உண்டு. முன்னும் நியூயார்க் முதலிய இடங்களிலும் கண்டிருக்கிறேன்; இங்கும் அந்த நிலை; ஏன் என்று தெரிவில்லை? திரு. சர்மா அவர்கள் அதற்குரிய காரணத்தை விளக்கினார். சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டுப்போர் நிகழ, அது பொது உடமை நாடாக ஆவதற்கு முன் அரசும் அதன் தலைவரும் அண்மையிலுள்ள பெருந்தீவில் (தைவான்) ஆட்சி அமைத்த காலத்தில் பல சீனர்கள் தாய் நாட்டை விட்டு வெளியேறி னார்கள் அல்லவா! அமெரிக்க நாடு அவர்களுடன் கூட்டாக இருந்தமையின், அவ்வாறு வெளியேறிய பலரை இந்த நாட்டுக்கு வரச்செய்து, குடியமர்த்தி வாழ்வளித்த தன்மையை நன்கு விளக்கினார். எனவே, அதன் காரணம் விளங்க எனக்கு மனநிறைவு உண்டாயிற்று. வரும்வழியில் அவர் பணியாற்றும் தொலைபேசிக் கருவிகள் செய்து அமைத்து, அதை இயக்கும் ஒரு பெரு நிறுவனத்தைக் காட்டினார்கள். இங்கே எங்கும் தனியார் தொழில் நிறுவனங்களே உள்ளமையின் நாடு சிறப்பதை முன் சில முறை சுட்டியுள்ளேன். இப்போதும் அதையே நினைத்தேன். சென்னையில் தொலைபேசியோடு நாள் தோறும் தொல்லைப்படுவதை இங்கே நினைத்தாலும் வேதனை விளைகிறது. இந்த நாட்டில் அதுவும் தனியார் நிறுவனங்களிடம் தொலைபேசி உள்ளமையின் குறைபாடு இன்றிச் சிறக்க நடைபெறுகின்றது. எல்லாத் துறைகளும் தவறு நேருமாயின், உடனே பொதுமக்களும் அரசும் தலையிட்டுக் கேட்பார்களே என்று அஞ்சுவதால், பெரும்பாலும் தவறு நேரா வகையில் முன் எச்சரிக்கை யாகவே உள்ளன. நம் ஊரைப்போல, தொலைபேசியோ மின்சாரமோ ஒரு நிமிடம் இங்கே தடைப்படுமாயினும்,