பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்டன் 6.5.85 சிறிது நேரம் கழிந்ததால் நேற்றைய குறிப்பினை இன்று காலையே எழுதி முடித்தேன். திரு. சர்மா காலை 7-15க்கே அவர்தம் பணிமேற் சென்றார். இந்த ஊர் வரலாற்று முக்கியம் படைத்ததென்றும், அமெரிக்கா உரிமைப்பெறப் போர்தொடுத்த இடமென்றும்கூறி அவற்றுள் ஒரிரு இடங்களைக் காணவேண்டும் எனவும் பவுத்ராஜி அவர்கள் சொன்னார்கள். அவர்களே தம் காரில் அழைத்துக் காட்டுவதாகவும் கூறினார்கள். அவர்கள் சன்மார்க்க விடயமாகப் பலவிடங்களுக்கு அடிக்கடி செல்வதால், அமெரிக்க அன்பர்கள் அவருக்கு ஒரு கார் வாங்கித் தந்திருந்தனர். ஒய்வு இன்றி அவர்கள் வாரந்தொறும் பல இடங்களுக்குச் செல்லுகின்றனர். காலை சற்றே குளிராக இருந்ததோடு மழையும் பெய்ய ஆரம்பித்தது. ஏனோ நான் செல்லுமிடமெல்லாம் இவ்வாறு மழை என்னை விடாது பின்பற்றுகிறது. இங்குள்ளவர்கள் இந்த ஆண்டு இங்கே மழை மிகக்குறைவு என்றும் நான் வந்ததால்தான் மழை பெய்தது என்றும் கூறினார்கள். காலைச் சிற்றுண்டிக்குப் பின் அருள் திரு. பவுத்ராஜி அவர்கள் அவர்தம் அன்னையார் நான் ஆகிய மூவரும் 40 கல் தொலைவிலுள்ள ஓரிடத்துக்குப் புறப்பட்டோம். அங்கே அவர்தம் சீடர் ஒருவர் உளர் என்றும் அவர் வழி சில இடங்களைக் காண இயலும் என்றும் கூறினர். அந்த இடத்துக்கும் இவர்களும் புதியர். எனினும் அங்கே செல்வ