பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மிகச் சிறிய அளவில் அமைத்த போதிலும், நாட்டு மக்கள் ஏற்காது, எதிர்க்க, ஆங்கிலப் படை இங்கே வர, போரும் தொடங்கியது. பின் அது வளர்ந்த வகையினையும் பிற வற்றையும் நன்கு சித்தரித்துக் காட்டும் பல பொருள்களும் படங்க்ளும் காணும் யாரும், இந்நாட்டு மக்களின் உரிமை வேட்கையினைப் போற்றக் கடமைப்பட்டவராவர். இத் துடன் பல பொருள்கள்அமைந்த பொருட்காட்சிச்சாலையும், போர்க் கருவிகள் மட்டுமன்றி, சிறத்த ஒரு நூல் நிலையமும் இங்கே வைக்கப் பெற்றுள்ளன. அனைத்தையும் சுற்றிக் கண்டு பின் சற்றே தொலைவிலுள்ள மற்றொரு காட்சிச் சாலைக்குச் சென்றோம். அங்கே கடந்த மூன்று நூற்றாண்டு களாக இந்நாட்டு மக்கள் பயன்படுத்திய பல்வேறு வகை யான வீட்டுப்பொருள்கள் - உடை, உணவு, உட்காருமிடங் கள், படுக்கை, படிப்பு, ஆயுதங்கள், கடிகாரம் போன்ற சாதனங்கள் அனைத்தும் வைக்கப்பெற்று, அவை எவ்வெவ் வாறு காலந்தொறும் வளர்ச்சி பெற்று, மாற்றமுற்று இன்றைய நிலைக்குவந்துள்ளன என்பதைக்காட்டுகின்றனர். தனியாக இதை விளக்க வழிகாட்டிகள் நியமித்துள்ளனர். வளமுற்ற மூன்று நூற்றாண்டின் நாகரிக வளர்ச்சியினை இங்கே ஒரளவு நன்கு புரிந்து கொள்ள இயலும். இவற்றை யெல்லாம் கண்டு, இம்மக்கள் தம் வரலாற்றினைப் போற்றும் நெறியினை எண்ணி உளம் நெகிழ்ந்து நின்றேன். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் உரிமை பெற்ற நாடுகள் அந்த உரிமை பெற்ற நிலையினை வருங்காலச் சமுதாயத்துக்குக் காட்டி, என்றும் அந்த உரிமைத் திருநாளை மக்கள் நினை வில் வைத்துக் கொள்ளச் செய்யாது தத்தம் வாழ்வும் வளமும். தம் கட்சியின் பலமும் ஓங்க வேண்டும்.தன் தனியா ஆட்சி நிலைக்க வேண்டும் என்ற கருத்தில் பாடுபடும் உலக நிலையில், இந்நாட்டு மக்கள் உரிமை பெற்ற சிறப்பினைப் போற்றும் நிலை எண்ண வேண்டியதுதானே! நான் முன்னரே வாஷிங்டன், பிலடெல்பியா ஆகிய இடங்களில் இவர்கள் பழமையைப் போற்றும் பல செயல்களை விளக்கியுள்ளேன்.