பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் போட்டுக்காட்டினர். மறுபடியும் வெளியில் சென்று, நாளை நியாகராவில் தங்குவதற்கு வேண்டிய வசதிகளை அறிந்து, ஒரு நூலும் செல்வியார் வாங்கிவந்தனர். திரு. கோபால் அவர்க்ள் வந்ததும் தொலைபேசியில் பேசி எல்லா ஏற்பாடு களையும் செய்து முடிக்கலாம் என்றனர். மாலை 4.30க்கு திரு. கோபால் வந்தார். உணவுக்குப் பின் உட்கார்ந்து எல்லாவற்றையும் அலசிப்பார்த்து உடன் நீர்வீழ்ச்சி நகருக்குத் தொலைபேசியில் பேசினார். தங்க ஒரு லிடுதியும் அதற்குச் செல்ல வசதியான பஸ் முதலியனவும் அங்கே சுற்றிக் காண்பதற்கான ஏற்பாடும் அனைத்தையும் தொலைபேசியிலேயே முடித்து, எல்லாவற்றையும் குறித்துத் தந்தனர். மேலும் மறுநாள் கிளைவ் லேண்டு செல்வ தற்கென, விமானப் பயணச்சிட்டினையும் பதிவு செய்து வைத்தார். எனவே,நாளை காலையிலே "பப்பலோ'சென்று நியாகரா வீழ்ச்சிக்கு அருகில் வீடுதியில் தங்கி எல்லாவற்றை யும் கண்டு, மறுநாள் 12மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் வந்து மாலை 6.30க்குப் புறப்பட்டு அன்று. (வியாழன்) மாலை 7.30 அளவில் கிளைவ்லேண்டு சேர முடிவு செய்தோம். நாளை அங்குள்ள விஜயா கந்தசாமி அவர்களுக்கும் தொலைபேசியில் பேசிச் சொல்லிவிட வேண்டும். மூன்று நாட்களிலும் பெற்றோர் இருவரும் அன்புடன் என்னை ஏற்று வேண்டுவ கொடுத்து உதவி யதையும் அஸ்வின் உட்பட அனைவரும் காட்டிய அன்பினையும் என்றும் மறக்கமுடியாது. - இன்று இங்கே பலரோடு பேசியநிலையிலும் இங்குள்ள நூல்களைப் பயின்ற வகையிலும் பல உண்மைகளை உணர்ந்து கொண்டேன். திரு. கோபால் அவர்களும் அவர் தம் சகோதரியாரும் மகனும் . ஏன்- அவர்கள் பெற்றோரும் தாய் (72) தந்தை (83) இருவரும் விடாது பல நூல்களைப் பயின்று கொண்டே இருக்கின்றனர். எனவே சிலவற்றை நானும், ஒய்வாக இருந்தமையின் படித்தேன். அவற்றுள் நான் அறிந்தவை சிலவற்றை இங்கே தருகிறேன்.