பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வ.அய். சுப்பிரமணியம் அவர்களுக்கு என் நன்றியினை யும் வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்ளக் கடன்ம பட்டுள்ளேன். என்னை இந்தி ஆட்சிக் குழுவில் இருத்தி அதன் வ்ழியே இப்பயணத்தை நின்த்தத் தூண்டிய தமிழகக் கல்வி அமைச்சர் மாண்புமிகு, திரு. அரங்கநாயகம் அவர்களுக்கும் என் நன்றி உரித்து, அனைத்துக்கும் மேலாகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவி என்னையும் அதனுடன் பலவகையில் இணைத்து, தமிழ் நலம் காணும் அண்ணல் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர் களுக்கும் என் நன்றியினையும் தலை தாழ்ந்த வணக்கத் தினையும் உரிமையாக்குகிறேன். இந்நிலையில் என்னை ஆற்றுப்படுத்திய இறைவனையும் தமிழன்னையையும் வணங்கி அமைகின்றேன். அண்ணுநகர், அ. மு. பரமசிவானந்தம் சென்னை 102 } வள்ளியம்மாள் கல்வி அறம் 7-9-1985 விரைந்த பணியில் அச்சுப் பிழைதள் உள்ளன. மன்னிக்க. அடுத்தபதிப்பில் செம்மையாக்கப் புெறும். ፕ ፰ ̆ ; . ) : - -, - . : ۱۶۹۰ ( ۰ جام * * - -