பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ்லேண்டு 10.5.85 255. புறப்பட்டது. சரியாக 9மணிக்குக் கிளைவ்லேண்டு சென்றது. அன்பர் கந்தசாமி அவர்கள் நுழைவாயிலேயே காத்திருந் தார். அவருடைய வீடு அருகிலேயே இருந்தது. (சுமார் 10 கல். சில இடங்களில் 35, 40, 45 கல்வரை சென்றிருக் கிறேன்.) வீட்டிற்குச் சென்றதும் திருமதி. விஜயா (திரு. கிருட்டினசாமிப் பிள்ளை அவர்கள் மகள்) அவர் கள் வரவேற்றார்கள். அவர்தம் தந்தையார் முன்னரே நான் வருவது பற்றி எழுதி இருந்தார்கள். கணவன் மனைவி இருவரும் அன்புடன் ஏற்றுப் புரந் தார்கள், நல்ல உணவு உண்டேன், பின் அவர்கள் பணி பற்றிக் கேட்டறிந்த்ேன். பெரிய மகன் இங்கேயே பொறியியல் படிப்பதாகவும் (சென்னையில் படித்தவர்) இளைய மகள் (9 வயது) 4வது படிப்பதாகவும் சொன்னார் கள். நான் இங்கே அமெரிக்க நாட்டுக்கு வரவேண்டிய காரணத்தையும் பிறவற்றையும் விளக்கிக் கூறினேன். இங்கே குளிர் மிக அதிகமாகவுள்ளது. பக்கத்தில் உள்ள பேரேரியின் வடகாற்றே இதற்குக் காரணம் என்றனர். சிகாகோவும் இப்படித்தான் இருக்குமாம். எனவே இன்னும் 10 நாட்கள் கடுங்குளிரில்தான் இருக்க வேண்டிருக்கும். போலும். சிறிது நேர்ம் பேசிக் கொண்டிருந்து இரவு 11. மணிக்கு உறங்கச் சென்றேன்.