பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ்லேண்டு 10.5.85 257 கொலை செய்யவில்லை). அவள் கைது செய்யப் பெறுவதும், காவல்துறையினர் எவ்வளவு பொறுப்பாகப் பணி செய்கிருர் கள் என்பதும் காட்டப்பெற்றன. நம் நாட்டில் சில ஆண்டு களுக்கு முன் இருந்த (Jury) சூரிகள் முன்னிலையில் நீதிபதி வழக்கினை விசாரிப்பது நன்குகாட்டப்பெற்றது. ஒரு பெண், நீதிபதியாக இருந்தார். குற்றவாளிக் கூண்டில் குற்றவாளி உட்காரவும் கூடும். இருதரத்து வக்கீல்களும் அவளைப் பல வகையில் கேள்விகள் கேட்கின்றனர். எதிரி (பிராசிகுஷன்) வக்கீல் சில தேவையில்லாத தனிப்பட்ட சில கேள்விகளைக் கேட்டபோது வாதியின் வக்கீல் அக்குறையச் சுட்டிக் காட்டு வதும், அதைக் கேட்டறிந்த நீதிபதி எதிர் வக்கீல்விடம் அத்தகைய கேள்விகள் கேட்கப் பெற வேண்டுவதில்லை எனச் சுட்டிக் காட்டுவதும் அவர் அதன்வழி அடங்கி நிற்பதும் நன்கு காட்டப் பெற்றன. விசாரணைக்கு முடிவில். சிலநாள் கழித்து . இரு வக்கீல்களும் தத்தம் சார்பில் கொள்கைகளை (orguments) விளக்கிப் பேசுவதும், முடிவில் நீதிபதி, சூரிகளைப் பார்த்து அனைத்தையும் நன்கு ஆராய்ந்து முடிவு காணுமாறு வேண்டுவதும் நன்கு அமைந் தன. பின் சூரிகள் முடிவினையும் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையினையும் ஆராய்ந்து, உண்மை யி ைன உற்றறிந்து, நீதிபதி முடிவில் தன் தீர்ப்பை வழங்குவதும், நீதிமன்றத்துப் பிற அலுவலர் செயல்கள், நடைமுறை முதலியனவும் நன்கு காட்டப் பெற்றன. சட்டம் பற்றியும் நீதிமன்றம் பற்றியும் ஒன்றும் அறியாத எனக்கு இந்தக் காட்சி இந்நாட்டின் காவல்துறை, அறங்கூறு அவையம் பற்றி நன்கு விளக்கிற்று. - பிற்பகல் 2 மணி அளவில் உணவு கொண்டு (எனக் கெனத் தயாரித்து, திருமதி. விஜயா அவர்கள் வைத்துச் சென்றிருந்தார்கள்) சிறிது நேரம் ஒய்வு கொண்டு, பின்னும் பல நூல்களைப் புரட்டினேன். இவர்கள் வீட்டில் மட்டு மன்றி, நான், சென்ற ஒவ்வொரு வீட்டிலும் கலைக் களஞ்சியங்களும் பிற பொது நூல்களும் வாங்கிவைக்கப் ஏ.-17