பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ்லேண்டு 11.8.85 நேற்று மாலை படுக்கப் போகுமுன் திரு. கந்தசாமி அவர்கள் வந்து, இங்குள்ள இருபெரு மருந்தகங்களில், நம் பள்ளியின் ஆய்வுகளத்துக்குத் தேவையான (Biology, Chemistry and Physics) & Goor $ 505675 air, soráčeir பிற வ ற் றை நன்கொடையாகத் தருவார்களென்றும் தேவையைச் சொன்னால் வாங்கிக் கப்பல்வழி அனுப்ப இயலும் என்றும் சொன்னார்கள். நான் ஊர் சென்றதும் முதல்வரைக் கலந்துக்கொண்டு தேவைக்கு எழுதுவதாகக் கூறினேன். மின்சாரம், மின்அணு முதலியனபற்றிப் பல பல கருத்துக்களைச் சொன்னார்கள். அப்போது எனக்கு, நயாகரா வீழ்ச்சிப் பக்கத்தில் DC மின்விசையிலிருந்து 'AC விசையினைக் கண்டுபிடித்த அறிஞரின் சிலை வைக்கப் பெற்றிருந்தது நினைவுக்கு வந்தது (அங்கே குறிக்கவில்லை). காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு, குழந்தை நடனம்' கற்கும் இடத்திற்கு என்னையும் வரச் சொன்னார்கள் நானும் விருப்பமுடன் சென்றேன். இந்த நாட்டிலும் சரி, இங்கிலாந்து, பிராஞ்சு முதலிய நாடுகளிலும் சரி, நம் பாரத நாட்டிலிருந்து - சிறப்பாகத் தமிழகத்திலிருந்து குடியேறி வாழ்கின்றவருள் பெரும்பாலோர் தத்தம் பெண்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்கின்றனர். பல்கலைக் கழகங் களில் அது பாடமாக இன்றேனும் வீடுகளில் பள்ளிப் பாடத்தைவிட நன்கு போற்றப்பெறுகின்றது. நான் தங்கிய ஒரு வீட்டில் (திரு. வள்ளியப்பன்) அக்குழந்தை (2வது