பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கிளைவ் லேண்டு)-சிகாகோ 12.5.85 நாடோடி மன்னனாக நாற்பது நாட்களாக பல ஊர் களைச் சுற்றி வந்த நான் அடுத்த 30 நாளைக் கணக்கிடத் தொடங்கினேன். 12-6.85ல் நான் சென்னையில் இருக்க வேண்டுமல்லவா எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குறிப்பினை எழுதி முடித்தேன். காலை நாளி தழைப் புரட்டினேன். (நியுயார்க் டைம்ஸ் - Newwork Times) அங்கே தாயகத்தில் தில்லியில் நடந்த கொடுமை யைப் படித்து வருந்தினேன். உயிர்களிடத்து அன்பு காட்ட வேண்டிய சமய நெறி வெறியாக அழிவினைத் தூண்டுவதை நினைந்து உலகம் எங்கே செல்கிறது?’ என நானே கேட்டுக் கொண்டேன். உள்ளம் வேதனையால் வெந்தது. காலைச் சிற்றுண்டிக்குப்பின் திரு. கந்தசாமி அவர்கள் நகர் நலம் காட்டத் தம் காரிலேயே அழைத்துச் சென்றனர். 10 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் ஒரு மணி அளவில் திரும்பினோம். கிளைவ் லேண்டு நகரம் அழகியது. ஒரு சில உயர்மாடிக் கட்டடங்கள் இருப்பினும், பெரும்பாலும் ஒரள வில் நின்றன. பல அலுவலகங்கள் - மத்திய மாநில - நகர அலுவலகங்கள் தனித்தனி அமைந்து ஓங்கி நின்றன. போகும் வழியில் கார் தூய்மை செய்யவேண்டும் என்றார் (நம் நாட்டில் சர்வீஸ் செய்தல் என்பர்) அதற்குக் குறைந்தது மூன்று மணி நேரமாகுமே என்றேன். இரண்டு நிமிடங்களில் எல்லாம் முடியும். நீங்களும் நானும் வண்டி 'யிலே இருக்கலாம் என்றார். காருக்குத் தேவையான கேஸ்"