பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ் லேண்டு-சிகாகோ 12.5-85 273 களில் நம் அரசு, இதுபோன்று எல்லா வசதிகளும் கொண்ட மருந்தகம் நிறுவி, நம் நாட்டுச் சிறந்த மருத்துவர்களை யெல்லாம் அங்கேயே வைத்து ஆதரித்தால், எத்தனை எத்தனையோ உயர்பட்டம் பெற்ற நம் நாட்டு மருத்துவர் கள் இந்த நாட்டுக்கு வரமாட்டார்களே! அப்படியே பொறி யியல் அறிஞர்களும் நம் நாட்டுச் செலவில் உயர் படிப்பெல் லாம் படித்து, பட்டம் பெற்று, அவர்கள் அங்கே பணியாற்ற வழியில்லாமல் அல்லவா இங்கு வந்து, ஏதோ வாழ வேண்டும் என்பதற்காக வாழ்கிறார்கள். இனியாகிலும் நம் தமிழக அரசும் இந்திய அரசும் இதை எண்ணிச் செய லாற்றுமா என்ற உணர்விலேயே இத் தொடர் குறிப்பில் பலப்பல எழுதத்தோன்றுகிறது. அப்படியே பல்கலைக் கழகங்களில் நடைபெறுகின்ற ஆய்வுகள் எப்படி இந்நாட்டுக் கும் பயன்படுகின்றன என்பதை எண்ணும்போது, நம் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அடுக்கடுக்காக அடுக்கி வைத் திருக்கும் ஆய்வுக்கட்டுரைகள் எதற்கும் பயன்படாதுகாட்சிப் பொருளாக உள்ள கொடுமையினையும் என் உள்ளம் எண்ணிற்று. தமிழ்த்துறையில் ஆராயப்பெறுகின்ற கட்டுரை கள் தமிழ் மக்களுக்காவது பயன்பட வேண்டாமா? பயன் படுகிறதா? எண்ணிப்பார்க்க வேண்டும். ஏழைகள் வரிப் பணத்தால் பல்கலைக்கழகங்கள் செயல்பட அதன் வழி வரும் ஆய்வுகள் அனைத்தும் அந்த ஏழை மக்களுக்கும் பயன் தர வேண்டாமா? இதை எந்தப் பல்கலைக்கழகமாவது அங்கே எண்ணிப் பார்த்ததுண்டா? எங்கோ சென்றுவிட்டேன் எண்பது கோடி நினைந் தெண்ணுவன்’ என்று எனக்காகவேதான் அன்றே 'ஒளவையார் பாடினார் போலும், அந்தப் பல்கலைக்கழகங் களையும் மருந்தகங்களையும் பார்வையிட்டுத் திரும்பினேன். இந்த மருந்தகங்களில்தான் பலப்பல பொருள்கள் தேவை சியாளருக்குத் தரப்பெறுகின்றன என்றும், எங்கள் பள்ளிக்கும் அறிவியல் ஆய்வு அரங்குக்கும் தேவையானவற்றைச் சொன்னால் கப்பல்வழி அனுப்ப ஏற்பாடு செய்ய முடியும் 8 l سصس .6T