பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகர்கோ 13-5.85 279 அந்தக் காலத்தில் இப் போராட்டமும் மாறாட்டமும் நடை பெற, நாடு முழுவதும் மாறுதல் அடைந்தது. மக்கள் வாழ் வும் ஒரு வகையில் மாறத் தொடங்கியது. எல்லாரும் இந் நாட்டு மக்கள்' என்ற உணர்வும் உரிமை வாழ்வும் நிலை பெற்றன. அக்காலத்தில் உண்டான அந்த வாழ்வியல் விதி முறைகள் இன்றளவும் நாடு முற்றும் செயல் பெற்று வரு கின்றன எனலாம். இந்தச் சிகாகோ பெருநகர் அமெரிக்க நாட்டின் இரண்டாம் பெரு நகராக இருந்து, சில மாதங் களுக்கு முன்தான் மூன்றாம் பெரு நகராக மாற்றம் பெற்ற தாம். ஆம்! இரண்டாம் இடத்தை மேலைக் கடற்கரையி லுள்ள லாஸ் எஞ்சிலஸ் (Los Angeles) பெற, இது மக்கள் தொகை கணப்பில் சற்றே பின் தங்கியது போலும், முதலிடத்தினை தொடர்ந்து நியுயார்க் நகரம் பெற்றுச் சிறக்கின்றது. மாலை திரு. கிருஷ்ணன் அவர்கள் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தார். அவர் வருமுன் நான் என் அடுத்துவரும் பயணங்கள் பற்றிப் பேசி 1.6-85 வரையில் மேற் கொள்ள வேண்டிய பயணங்களுக்கு உரிய முன் பதிவுகள் அனைத்தை யும் செய்து முடித்தேன். சித்தாந்த சங்கம் உள்ள "காவாய்த்' - தீவுக்கும் சென்று 1-6-85 காலையில் திரும்ப உரிய விமானப் பயணத்திற்கும் ஏற்பாடு செய்யப் பெற்றது. திரு. கிருஷ்ணன் வந்த பிறகு அனைத்தையும் விளக்கி, அந்தச் சித்தாந்த சங்கத்துக்குப் புறப்படும் நேரம் முதலியவற்றைத் தொலைபேசி வழியே தெரிவித்து விட்டேன். பின் இங்கே உள்ள இரண்டொரு அன்பர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் பேச வேண்டும் என்றனர்; எனினும் அது பற்றி ஒன்றும் முடிவு செய்ய இயலா நிலையினை விளக்கினேன். நாளை மறுபடியும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவதாகவும். இயன்றால் நேரில் வருவதாகவும் சொன்னார்கள். உணவுக்குப் பின் திரு. கிருஷ்ணன் அவர் துணைவியார் ஆகியோருடன் நெடுநேரம் பல பொருள்களைப் பற்றிப்