பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள். பேசிக் கொண்டிருந்தேன். சென்னையில் பொறியியற். கல்லூரியில் அவர் பயிற்சிபெற்ற காலத்தும், அதற்கு முன். அவர் ஊர் வேலத்தில் வாழ்ந்த, காலத்தும் தாம் பெற்ற அனுபவங்களையெல்லாம் கூறினார். உண்மையிலேயே நான் முன்னரே குறித்தபடி, இத்தகைய சிறந்த ஆராய்ச்சி யாளர்களை உருவாக்கிய தமிழகம் அவர்களை அணைத்து அவர்தம் அறிவு, ஆராய்ச்சி, அதன் தெளிவு, பயன் ஆகிய வற்றை நம் நாட்டுக்கே பயன்படுத்தத் தவறிவிட்டதை நினைந்தேன். அவர் ஆய்விற்கு உண்டான அங்கே அமைந்த பல தடைக் கற்களே, அவரை இந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தன. இப்படிப் பல.அறிஞர்கள் - ஆய்வாளர் கள்.நம் நாட்டினை விட்டு வெளியேறி, பெற்ற பயனை மற்றவர்களுக்கு வழங்குகின்றனர். இந்த அவல நிலையை இனியாவது தமிழக அரசும் பாரத அரசும் மாற்றுமா? அவர்தம் மின்அணு ஆய்வின் செயல்முறைகள் பற்றி யும், அதனால் என்னென்ன வகையில் மக்கள் பயன்பெறஇயலும் என்பது பற்றியும் நன்கு தெளிவாக - எளிய முறை யில் - எல்லோரும் அறியும், வண்ணம், விடியோ’வில் அமைத்து, 20 அல்லது 30 நாட்களில் முறையான பாட அமைப்பில் தர இயலும்ாயின், அவற்றை எங்கள் பள்ளியில் இட்டுக் காட்டி, மாணவர்களைப் பயன்பெற்று உயரச் செய்யலாம் எனக் கருதிக் கூறினேன். அப்படியே அவர்தம் துணைவியாரும் 'உயிரியல்' (Biology) அதன் தொடர்பான அறிவியல் கூறுகளைச் சென்னை வரும்போது மாணவர் களுக்குத் தனி வகுப்புகள், நடத்திவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன், இருவரும் அத்தகைய ஆக்கப் பணிகளை விரும்பி மேற்கொண்டு செயல்படுவதாகச் சொன்னார்கள். திரு. கிருஷ்ணன் அவர்கள் அறிவியல் ஆக்கம் பள்ளிக்குப் பயன்பட வேண்டும் என்ற அவாவுடைய வர். நெடுநேரம் பேசி இருந்து 11 மணி அளவில் உறங்கச் சென்றேன். -