பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 14.5.85 காலையில் எழுந்து கடன்களை முடித்துக்கொண்டு. குறிப்பெழுதி, முடித்தேன். நாற்பது நாட்களுக்குமேல் பலவிடங்களில்பட்டு, உழன்றமையால் உண்டான சோர்வு இன்னும் உடலைவிட்டு நீங்கவில்லை. எனவே வெளியே செல்ல முயன்றும் முடியவில்லை. இன்றும் ஒய்வு கொண்டேன். மாலை 6 மணிக்குமேல் உணவு கொண்டு. பிறகு வெளியே செல்லலாம் என்றனர். திரு. கிருஷ்ணன் அவர்கள், பணிமேற், சென்றார். டோக்கியோவிலிருந்தும். சியாட்டல் வாஷிங்டனிலிருந்தும் இரு பேராசிரியர்களும் தொலைபேசியில் பேசினர். எனக்கென அங்கங்கே தங்கவும் பிற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்தமை பற்றி விளக்கி உரைத்து, குறித்தபடி குறித்த நாளில் வருமாறு பணித்தனர். யாண்டும் நிறைந்த இறையருளையும் முன்பின் அறியா அப் பேராசிரியர்தம் நல்ல பண்புகளையும் எண்ணிப் போற்றிப் பாராட்டினேன். ஊரிலிருந்து மெய்கண்டான் எழுதிய கடிதமும் வந்தது. பள்ளியின் செயல்முறைகள் பற்றியும் , சின்மயானந்தர் விழாவினைப்பற்றியும் விளக்கி எழுதியிருந்தான். டோக்கியோவிலிருந்தும் (தொலைபேசி யின்றி) கடிதமும் வந்தது. யாவருக்கும் பதில்கள் எழுதி முடித்தேன். கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சிலஸ் ஆகிய இடங்களுக்கும் எழுதினேன். பின், பகல் ஒரு மணி அளவில் ஒய்வு கொண்டேன்; நன்கு உறங்கினேன். இடையில் இங்கே இருந்த Reader's Digest என்ற இதழைப் புரட்டி னேன். அதிலே அமெரிக்கப் பழங்கால அதிசயங்கள் 'The Mysteries. of America's Ancient ones' at Girp (Ronald Schiller) ரெனால்டு சில்லர் அவர்கள் எழுதிய கட்டுரை யினைப் படித்தேன். மெக்சிகோ நாட்டில், மாடு மேய்க்கும் சிறுவர்கள்.1888-ல் கண்ட ஒரு ஆழ்நில நகர் ஒன்றினைப்