பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பற்றிப் படத்துடன் அதில் விளக்கம் காட்டியிருந்தார். அதில் உள்ள பழம்பெரும் உணவுக் கலன்கள், பயன்படுத்திய கருவிகள், சமைத்த அடுப்பின் சாம்பல்கள் இன்னும் அப்படியே உள்ளனவாம். அந்த இடத்தினைத் தற்போது "கிளிப் பாலஸ் (Cliff Palace என அழைக்கின்றனர். அங்கே வாழ்ந்த மக்களை அமெரிக்க இந்தியர்' எனவே அழைக்கின் றனர். ஆனால் அவர்தம் வாழ்வனைத்தும் 13-ம் நூற்றாண்டில் இல்லையாகக் கழிந்ததாகும். அவற்றை ஆழ்ந்து தோண்டிக் காணப் பலப்பல பழம் பெரும் நாகரிக .ெ ந றி க ள் தெரிந்ததாகவும் எழுதியிருந்தார். புது மெக்சிகோ வடமேற்குப் பகுதியில் சாகோ (Chaco)வில் 15 கல் நீளமும் ஒரு கல் அகலமும் உள்ள இடத்தில் கி. பி. 1150-ல் மக்கள் சிறக்க வாழ்ந்த பல குறிப்புகளைத் தொகுத்துக் காட்டியிருந்தார். 5000க்கு மேற்பட்ட மக்கள் அக் காலத்தில் கட்டிய 12 பெருநகரங்களையும் பிறவற்றையும் சுட்டி, பல அடுக்கு மாளிகைகளையும் அவற்றில் அமைந்த குடியிருப்புப் பகுதிகளையும் விளக்கி எழுதியிருந்தார். மூன்று ஏக்கர் எல்லையில் 800 அறைகள் கொண்ட ஐந்தடுக்கு உடைய D வடிவமான கட்டிடம், வட்டம்ான கட்டிடம் போன்ற பலவற்றைப் பல விளக்கத் துடன் விளக்கியிருந்தார். சாலைகள் அமைப்பும் பிறவும் காட்டப்பெற்றன. சுமார் கி. பி. 1150-ல் அவர்கள் சிறந்த நாகரிக வளத்துடன் வாழ்ந்தார்கள் என்றும் அது நான் முன் குறித்துள்ள, தென் அமெரிக்க மாயா நாகரிகத்துடன் ஒத்துள்ளது என்றும் ஆய்ந்து கண்டுள்ளார், (மாமா நாகரிகம் நம் பண்டைய நாகரிகத்துடன் பொருந்தியது என்பதை நான் நியூயார்க் பொருட்காட்சியினைக் கண்ட காலத்தில் சுட்டிக் காட்டியுள்ளேன்). அவர்கள் மாற்றா ரிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள மேற்கொண்ட அமைப்புகள், வழிகள் பிறவற்றையும் விளக்கி, சில தொல் பொருள் ஆய்வாளரின் கருத்துப்படி, தண்ணீர் உரிமை போன்ற சிலவற்றிற்காக அவர்களே தமக்குள் சண்டை யிட்டு மறைந்திருப்பார்களோ என்ற ஐய வினாவையும்