பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மாலை 7 மணி அளவில் இந்த ஊர்க்குழு (County) எல்லையில் அமைந்த நூல் நிலையத்துக்கு திரு. கிருஷ்ணன் அவர்களும் அவரது துணைவியாரும் என்னை அழைத்துச் சென்றனர். நான் நியூயார்க், லண்டன், பாரிஸ் முதலிய பெருநகரங்களில் பெரும் நூல்நிலையங்களைக் கண்டமை யின் இதைக் காண வேண்டுமா எனக்கூட எண்ணினேன். எனினும் சற்றே வெளியில் சென்று சிகாகோ'வின் தன்மை யினையும் காணவேண்டியுள்ளமையின் புறப் பட்டு ச் Q&airGipsir. 'Arlington Hights Memorial Library’ stairp நூல் நிலையத்துள் நுழைந்தேன். உள்ளே புகுந்தபின்தான் நான் வரவேண்டாம் என எண்ணியது எவ்வளவு தவறு என உணர்ந்தேன். சிற்றுார் நூல்நிலையம் . ஏதோ ஒரு சிறு அளவில் இருக்கும் என எண்ணிய் எனக்கு, அங்கே பெரும் வியப்பே காத்திருந்தது. நம் சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையத்திலும் பெரிது எனலாம். அங்கே குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் என அமைந்த மிக விரிவான பகுதியைப் போன்று, இதுவரை நான் எங்கும் காணவில்லை. இளங்குழந்தைகள் வின்ளயாடு தற்குரிய் எல்லா விளையாட்டுக் கருவிகளும் இடமும் தனியாக நன்கு காக்கப் பெற்றிருந்தன. சில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். படங்கள், படத்தொடு கூடிய நூல்கள், சிறுவர் பத்திரிகைகள், பொம்மைகள்இன்னும் என்னென்ன தேவையோ அத்தனையும் இருந்தன. எண்ணற்ற நூல்கள். அவைபற்றியெல்லாம் அங்கே துணை யாளராக இருந்த ஒர் அம்மையாரிடம் கேட்டேன். அவர்கள் அவைபற்றிய விளக்கங்களையும் நூல்பட்டியல் போன்றவற்றையும் கிடைக்குமிடம் முதலியனபற்றியும் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நூல் கண்காட்சியினைப் பற்றியும்விளக்கிக்கூறி, சிலவற்றைத் தந்து உதவினர். பின் மறுபக்கம் பெரியவர்களுக்கென அமைந்த பகுதியினைச் சுற்றிப் பார்த்தேன். பல்வேறு துறைகள்:- நாவல் - இலக்கியம் - அறிவியல் பிரிவுகள்-கணிப்பொறி போன்றவை