பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 15.5.85 காலை முறைப்படி எழுந்து கடன்களை முடித்துக் கொண்டேன். இன்று இந்த மாநிலத்துக்கு அடுத்துள்ள விஸ்கான்சன் (Wisconsin) மாநிலத்தில் உள்ள பார்க் சயிடு (Park Side) எல்லையில் அமைந்த விஸ்கான்சன் பல்கலைக் கழகத்தினைக் காணப் புறப்பட்டேன். அங்கே தமிழ் உண்டு. திருவாளர் கிருஷ்ணன் அவர்களும் துணைவியாரும் சுமார் 60 கல் தொலைவிலுள்ள அந்நகருக்கு அழைத்துச் சென்ற னர். அங்கே பொறியாளர் திரு. பழநியப்பன் அவர்கள் வீட்டிற்குச் சென்று, அந்தப் பல்கலைகழகத்தில் பயிலும் அவர்தம் மனைவியாரை உடன் துணை அழைத்துச் செல்லு வதென முடிவு செய்யப் பெற்றது. அப்படியே காலை 7.30க்கு புறப்பட்டு 9 மணி அளவில் அங்கே சென்றோம். அவர் பணி மேற் சென்றிருந்தார். அம்மையார் இருந்தனர். திரு. கிருஷ்ணன் அவர்களும் வேறு பணியின் பொருட்டு வெளியே சென்று மாலை திரும்புவதாகச் சொல்லிச் சென்றார். அங்கேயே சிறிது நேரம் நாளிதழ்களைப் படித்துக் கொண்டிருந்து பகல் உணவிற்குப் பிறகு நகரைச் சுற்றிப் பார்த்து, பின் பல்கலைக்கழகத்தையும் காணப் புறப் பட்டோம். சிகாகோவினைச் சுற்றிய அந்தப் பேரேரியும் பக்கத் திலேயே இந்நகருக்கு வடக்கே 60 கல் தொலையில் இருந் தமையின், அந்த ஏரிக்கரை ஓரமாகச் சென்றோம். அது பெரிய துறைமுகம் போல் காட்சி அளித்தது. பல சிறு படகு