பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 16.5.85 - 293 விள்க்கினார்கள். மிகப் பழங்காலத்தில் நம் தமிழகத்தி லிருந்து வந்து இங்கே குடியேறிய இந்தியர்களை ராக்கோ இந்தியர் (Rocko Indians) என அழைப்பார்களென்றும், சில நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் உண்ண உணவின்றி, உடல் ஒடுங்கும் நிலையில் ஊர் ஊராகத் திரிந்தார் களென்றும், இந்த ஊருக்கு வந்தபோது இங்கே ப ய ன ற்ற கோசுக் கீரையும் அழுகிய வெங்காயமும் கிடைத்த தென்றும், அவற்றை இணைத்து இப் பெயரை இட்டனர் என்றும் கூறினார் சி.கா-கோ' என்ற மூன்று சொற்கள் அடங்கிய பெயரே இவ்வூர்ப் பெயரென்றும் அம்மூன்று சொற்களும் மேலே கண்ட பொருளை உணர்த் துவன என்றும் கூறினார். இது மேலும் எண்ணி ஆராய்தற் குரியது போலும். பிற்பகல் உணவுக்குப்பின் பலருக்கும் எழுத வேண்டிய கடிதங்களை எழுதி முடித்தேன். மாலை ஒரு கலைக் காட்சிக்குச் செல்வதாக இருந்தோம். எனினும் மழையின் காரணத்தால் செல்லமுடியவில்லை. பக்கத்தில் இவர்கள் சாமான்கள் வாங்கும் கடைக்குச் சென்றோம். அங்கே எல்லாப் பொருள்களும் கிடைக்கின்றன. உயர்ந்த மூன்றடுக்கு மாடி, அடித்தளம் வேறு; மிகமிகப் பெரிய விசாலமான இடம். இதுவரை இது போன்ற கடை அமைப்பு (Complex) நான் எங்கும் கண்டதில்லை. கடை அமைப்பு பெரியதாக இருந்தது போலவே, அங்கே விற்கும் பொருள் களும் மிகமிக அதிக விலையிடப் பெற்றிருந்தன. சில ஆடை களுக்கு 50% 30% கழிவு எனக் காட்டியிருந்தனர். இருந் தாலும் அந்த விலைகளும் இங்கேயே வேறு வெளியிடங்களில் விற்கும் விலைக்கும் அதிகமே என்றனர். இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ளமையாலும் மாலையாக இருந்தமை யாலும் தேவையான மருந்து, உணவுப் பொருள்கள் மட்டும் வாங்கிக் கொண்டு புறப்பட்டனர். வழியில் திரு. கிருஷ்ணன் அவர்கள் பணிபுரியும் பணியகத்தைக் கண்டோம். பரந்த நிலப்பரப் பில் பல உயரிய கட்டடங்கள் கொண்ட,