பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அமெரிக்க நாட்டிலும் அனைவரும் பலவிடங்களில் வேலை செய்கின்றவர்கள். எளிமையாக விடுமுறை பெற்று வருதல் இயலாது. நம் நாட்டினைப்போல இங்கே வேலை யில் சேர்ந்தபின் எத்தனைநாள் வேண்டுமாயினும் விடுமுறை பெறலாம் என்ற நிலை இல்லை. இங்கே எல்லாத் துறை களும், நான் முன்னரே சுட்டியபடி, தனியார் முயற்சியா லேயே நடைபெறுகின்றமையின், நல்ல திறமை மிக்கவர் களையே பணியில் அமர்த்துவதுடன் அவர்களை என்றும் நிரந்தரமாக்குவதில்லை. அரசாங்கமும் கட்டுப்படுத்த இயலாது. எனவே இந்த முறை இருசாராருக்கும் நலம் பயக்கும் என்கின்றனர். அவரவர்கள் வேண்டும்போது - தேவையற்றாலோ ஒழுங்காகப் பணி செய்யாவிட்டாலோ வெளியனுப்பவும், அப்படியே பணியாற்றுபவரும் பிடிக்கா விட்டாலோ அன்றி வேறு இடத்தில் அதிக ஊதியமோ அதிகாரமோ பிறவோ பெறும் நிலையிலோ விட்டுச் செல்ல வும் வாய்ப்பு உண்டு. இங்கே இந் நாட்டிலேயே சிறந்த அறிவியல் விற்பனர்கள் குறைவாக உள்ளமையில், பலர் இந்தியா போன்ற கீழைநாடுகளிலிருந்தும் ஐரோப்பிய நாடு களிலிருந்தும் வந்து, நிலைத்துப் பணிபுரிகின்றனர். எனவே இருசாராரும் விதிகளைத் திட்டமாக்கி, தேவையாயின் மாற்று நிலை பெறத்தக்க வழிகண்டு தொழிற்படுகின்றனர். இதனால் தொழில்துறைகளும் அலுவலகங்களும் நன்கு வளர்கின்றன என்கின்றனர். இத்தகைய நிலையில் யாரும் விடுமுறை எடுப்பதில்லை. தொடர்ந்து எடுத் தால் வேலைக்கே ஆபத்து. இவ்வாறு வருகிறவர்களுக்கு - சுற்றிக்காட்டுவதற்கென விடுமுறை எடுத்தால் நன்கு அறிமுகமானவர்கள் பாதி நாள் வேலைக்குச் செல்ல முடியாது; மேலும் சிலவிடங்களில் மணிக்கணக்கில்-அல்லது தொழில்நிறைவு (Contract) நிலையில் ஊதியம். எனவே எல்லாத் துறைகளும் இங்கே நன்கு முன்னேறுகின்றன. சரியாக 11-30க்கு, குறித்தபடி திரு. இராமாநுஜம் அவர்கள் அறைக்குச் சென்று சேர்ந்தேன். திருமதி. கிருஷ்ணன் அவர்கள் அப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு