பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜினிவா 4-4.85 ஜினிவா விமான நிலையம் சிறியதாக இருப்பினும் எல்லா வசதிகளும் நிறைந்திருந்தது. என் சாமான்களை எடுத்துக்கொண்டு வெளிவரும்போது, காவலர் (police) ஏனோ என் பெட்டிகளை ஆராய்ந்தனர். பலரை அப்படியே விட்டுவிட்டனர். என்னோடு பம்பாய் விமானத்தில் வந்த பலரும் செல்ல, என்னைத் துருவி ஆராய்ந்த காரணம் தெரிய வில்லை. ஆனால் ஆராய்ந்தபின் மலர்ந்த முகத்துடன் மன்னி யுங்கள் (excu08 பs) என்று கூறி வழியனுப்பினர். எனவே யாரிடமோ ஐயம் கொண்ட காரணத்தால் என்னைச் சோதனையிட்டதை உணர்ந்தேன். பெட்டிகளில் உள்ளே உள்ள பொருள்களை அகம் காட்டும் கருவி வழியே ("x" ray) தெரிந்து விரைவில் அனுப்புகின்றனர். எனினும் என்னுடைய பெட்டியினைத் திறந்து எல்லாவற்றையும் பிரித்துப் பார்த்திே அனுப்பினர். உடன் ஒரு வாடகை மோட்டாரை எடுத்துக்கொண்டு எனக்கென ஒதுக்கியிருந்த விடுதிக்குச் (hotel) சென்று 11. மணி அளவில் சேர்ந்தேன். எங்கும் சாமான்களை எளிமை யாக எடுத்துச் செல்ல டிராலிகள் உள்ளமையின் கடினமாக இல்லை. எனக்கென இருந்த அறையில் சென்று நன்கு குளித்து, சற்றே ஒய்வெடுத்துக் கொண்டேன். (காலை இரு முறை உண்டமையின் பசியே இல்லை). பின் 2 மணிக்கு மேல் வெளியே வந்தேன். பக்கத்தில் உள்ள ஒர் உணவு விடுதியில் புகுந்தேன். அது வெறும் உணவு விடுதியாக மட்டும் இல்லை. மின் அலைகள் கொண்டு (olectronic) பலப்புல விசித்திர