பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 17-5.85' 267 செய்கின்றமையின் மிக எளிமையாக இடம் காண வாய்ப் பாயிற்று. பல்கலைக்கழகம் நகர் நடுவில் இருப்பினும், சுற்றிலும் வேண்டத்தகாத குடியிருப்புப் பகுதிகள் இருப் பினும், பல்கலைக்கழக எல்லையுள் யாவும் இனிமையாக இருந்தன. பரந்த புல்வெளிகள் - நல்ல மரநிழற் சாலைகள் உயர்ந்த கட்டிடங்கள் - வெவ்வேறு துறைகளுக்கென அமைந்த தனிக் கட்டடங்கள் - உணவுச் சாலை, அஞ்சலகம் போன்ற பிற வசதிகள் - விடுதிகள் அனைத்தும் சிறக்க உள்ள பெருநகராகப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அத்தகைய பல்கலைக் கழகத்தே அன்றுதொட்டு பல பேரறிஞர்கள் சிறக்கப் பணியாற்றி வருகின்றனர். நம் நாட்டைச் சேர்ந்த, சர். சி. வி. இராமன் உறவினரான நோபல் பரிசுபெற்ற டாக்டர். சந்திரசேகரர் இங்கே பெளதிகத் துறையில் சிறந்த ஆராய்ச்சி விற்பனராகப் பணியாற்றுகிறார். அவரையும் காணவேண்டும் என்ற எண்ணத்தோடு திரு. இராமாநுஜம் அவர்கள் அறையுள் காலெடுத்துவைத்தேன். - திரு. இராமாநுஜம் அவர்கள் மற்றொரு பேராசி ரியரோடு (அமெரிக்கர்) பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர். பின் திருமதி. கிருஷ்ணன் அவர்கள் வெளியே சென்று 3-30க்குத் திரும்புவ தாகவும்.(அதற்குள் என் பணி முடிவுறும் என்றும் அறிந்தமை யின்) சொல்லிச் சென்றனர். பின் நான் ஆசிரியர்கள் மாணவர் ஐவரும் பிறரும் இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப் பெற்றேன். அங்கே பேராசிரியர் என்னை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். பின் தமிழ் இலக்கிய வளர்ச்சிப்பற்றித் தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரையில்.சுமார் 30 நிமிடங்கள் பேசினேன். பின் அவர்கள் சில கேள்விகள் கேட்டனர். கி. பி. 2-ம் நூற்றாண்டிற்கும் 6-ம் நூற்றாண்டிற்கும் இடையில் உண்டான தமிழ் நாட்டு மாறுதல்களைப் பற்றியும் பின் உண்டான பக்தி இலக்கிய வளர்ச்சி பற்றியும் கேட்டறிந்தனர். நானும் அக் காலக்கிய