பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 ஏழு நாடுகளில் எழுபதுங்ாட்க்ள் வேறு சில இடங்களும் உண்டாம். எனவே இங்கே பல துறையில் பணியாற்றும் பேராசியர்கள் மட்டுமே வந்து அமைதியாக உண்கின்றனர். உண்ணும் போதே அமைதி யாகத் தம் ஆய்வுகள் பற்றியும் சிந்தித்துப் பேசுகின்றனர். டாக்டர். இராமநுஜம் எனக்கு அளித்தது சிறப்பு விருந் தாகையால் அவர்தம் மாணவரும் அங்கே உடன் வந்திருந் தனர். மெல்ல உணவு உண்டு 2 மண் அளவில் அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் உண்ட மேசைக்கு அடுத்த மேசை யில் நோபல் பரிசு பெற்ற திரு. சந்திரசேகரர் அவர்களும் உண்டு கொண்டும், பிற பேராசிரியர்களுடன் ஆய்வு பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தார். சிறிது நேரம் இருந்து, பின் இராமநுஜம் அவர்கள் அறிமுகப்படுத்த அவர்களைக் கண்டு வணங்கி, என் வாழ்த்தினைக் கூறினேன். டாக்டர் CW. இராமன் அவர்களைப் பெங்களுரில் ஒரு முறை கண்டு மகிழ்ந்த நிலையில் - அவர்தம் உறவினராகிய இச் சந்திரசேகரரை இங்கே 12,000கல் தொலைவு தாண்டி, அவர்பணிபுரியும் பல்கலைக்கழகத்திலேயே காணும் நல். வாய்ப்பினை எண்ணி மகிழ்ந்தேன். அவரும் என்னை பற்றிக் கேட்டறிந்து, என் பயணம் பற்றி அறிந்து மகிழ்ந்து வாழ்த்தினர். பின் விடைபெற்று வெளியில் வந்தோம். டாக்டர். இராமநுஜம் அவர்கள் அவர்தம் இருவரை அழைத்து, நூலகம் முதலிய இடங்களைக் காட்டி வருமாறு அனுப்பி வைத்தனர். எதிர்பாராத விதமாகப் பழம் பெறும் இந்திய நாட்டு இலக்கியங்களை ஆராய்ந்த (தற்போது சுவிஸ் நாட்டில் வாழும்) அறிஞர் திரு. பாஷாம் அவர்கள் 3.30க்கு பகவத்கீதையைப் பற்றி பேசப் போவ தாகவும் அதற்குள் முடித்து, அக் கூட்டத்துக்கு வருமாறும் கூறிச் சென்றனர். முதலாவது ஒரு வெளியிடத்துக்கு என்னை அழைத்துச் செ ன்றனர். அங்கே தாமிரத்தில் ஒரு பெரிய குறியீடு ஒரு உயர்ந்த மேடை மேல் பொருத்தப் பெற்றிருந்தது. அதை அவர்கள் காட்டினர். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.