பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 17-5-85 301 அந்த இடத்தில்தான் முதன்முதல் உலகை நடுங்க வைத்த அதே வேளையில் இரண்டாம் உலகப் போரை நிறுத்திய அணு ஆயுத்தைத் தயார் செய்வதற்கு அடிப்படையான அணுவைப் பிளக்கும் ஆய்வு நடைபெற்று அதைப் பிளந்து காட்டினார்களாம். ஆம் முதலில் அணுவைப் பிளந்து காட்டியவர் ENRICO.FERM1 என்ரிகோ பெர்மி என்ற இத்தாலிய நாட்டினர். அவரும் வேறு சிறந்த ஆய்வாளர் களும் சேர்ந்து 1942 டிசம்பர் இரண்டாம் தேதி இங்கே முதல்முதல் அணுவினைப் பிளந்தார்களாம். அந்த அணுவினைச் சதகூறாக, நூறு நூறு சதகூறாக-இட்ட நிலை யில் ஒரு கூறுஎடுத்து அதைப் பெரிதாக்கி, இங்கே தாமிரத்தில் அதன் உருவம் அமைய ஒரு நினைவினை நிறுவியுள்ளனர் என்று அவர் கூறும்போது நான் உண்மையிலேயே இங்கும் என்னை மறந்தேன். "அணுவைச் சத கூறிட்ட கோணினும் உளன் என்று பிரகலாதன் வாக்கில் ஆயிரல் ஆண்டுகளுக்கு முன்பே நம் கவிஞன் கம்பர் கூறியதை எண்ணினேன். அதைப் பரிகசித் தவர் வியக்கும்படி இந்த அணுவின் கூறுபாடு எத்தனை வகைகளில் (Electronics etc) நம் வாழ்வில் பயன்படுகிறது என்பதை இந்த நாட்டில் உள்ளவர் நன்கு அறிவர். நான் முன்பே சிலவற்றைச் சுட்டியிருக்கிறேன். இங்கே இந்த அணுவினைக் கூறுபடுத்திய நிலையின் ஆய்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்றைய கணிப்பொறி போன்ற வையும் அட்டிற் சாலையின் பொருள்களும் காப்புக்கெனப் பயன்படுவனவும் தவிர்த்துப் பிற சாதாரண, தொலைபேசி மக்கள் வாழ்வில் பயன்படும் பிற பொருள்கள் மட்டுமன்றி, பிற எல்லாத் துறைகளிலும் அதைப் பயன்படுத்தி வரும் நிலையினையும் இன்னும் எந்தெந்த வகையில் பயன்படுத்த லாம் என்ற ஆய்வு நினையினையும், இங்கே கடந்த ஒரு திங்களில் கண்ட நான், உலகவாழ்வின் விரைவுநிலை எங்கே கொண்டு விடுமோ என எண்ணினேன். பல பொருள்கள் ஆக்க நெறிக்குப் பயன்படும் தன்மை ஒருபுறம் இருக்க, உலக