பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 18.5-85 காலை எழுந்து கடன்களை முடித்துக்கொண்டு குறிப்பினை எழுதி முடித்தேன். காலையில் சான்பிரன் சிஸ்கோ, லாஸ் எஞ்சிலஸ்.ஆகிய இடங்களில் உள்ள அன்பர் களுக்கு நான் வரும் நாள் நேரம் முதலியவை குறித்துத் தொலைபேசியில் தகவல் தெரிவித்தேன். இன்று நகரைச் சுற்றிப் பார்க்கவும் மாலையில் டாக்டர் காந்தி (திரு. பழநியப்ப செட்டியார் மகன்) அவர்கள் இல்லத்தில் உணவு கொள்ளவும் ஏற்பாடு. எனவே, அதற்கேற்ப காலை உணவுக்குப்பின் வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொண்டு 11 மணி அளவில் திரு. கிருஷ்ணன், அவர்தம் துணைவியார் இருவருடன் நானும் புறப்பட்டேன். சிகாகோ நகரின் நெடுந் தெருக்களில் வண்டி செல்லும்போது, அமைந் துள்ள மேம்பாலங்களின் அடுக்குகளையும் அமைப்புகளையும் கண்டுகொண்டே சென்றேன். எத்தனைத் திருப்பங்கள், உயர்வு தாழ்வுகள், குறுக்குச் சாலைகள் இருப்பினும் நாம் செல்லும் இடத்திற்குக் குறிகாட்டும் சாலையின் எண் அமைந்த வகையினை எண்ணினேன். முதலில் இங்கே மிக மிக உயரமான சீயர்ஸ் கோபுரத்தினை (Sears Tower) காணல் வேண்டும்; இங்கே மட்டுமன்றி அமெரிக்காவிலேயே . ஏன் - உலகிலேயே மிக உயரமான கட்டடம் - கோபுரம் இது என்று கூறினர். நான் மட்டும் தனியாக மேலே சென்று காணலாம் என்றும் அவர்கள் பலமுறை பார்த்திருப்பதாக வும் சொன்னார்கள். அதன் உச்சியில் ஏறிக் காண்பதற்கு மிக அதிகமாகக் கூட்டம், கியூ வரிசையில் நுழைவுச் சீட்டு