பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 18.5.85 - 307. எடுக்க, நின்ருேந்தது. நான் அந்த வரிசையில் நின்று 20 நிமிடங்கள் கழித்து நுழைவுச்சீட்டு எடுத்தபின் மேலே மின் தூக்கி வழியாகப் பலருடன் கொண்டு செல்லப்பெற்றேன். அதன் உயரம் 442-மீட்டர் என்றும் 105 அடுக்குகள் உள்ள தென்றும் அதற்கு மேல் இருகூம்புகள் உள்ளன என்றும் கூறினர். எனினும் மேலே ஏதோ பழுது பார்க்கின்ற காரணத்தால் 98வது மாடி வரையிலேயே நாங்கள் செல்ல முடிந்தது. அதன் உயரம் 1288 அடியாகும். அதற்குமேல் ஏழு மாடிகளும் கூம்பும் உள்ளனவாம். நான் முன்னரே நியூயார்க் நகரில் உள்ள உயரிய கட்டிடம் பற்றியும் (Empire Building) அதில் நான் ஏறிக் கண்ட காட்சியினையும் பற்றிக் குறித்துள்ளேன். இது அதனினும் சற்றே உயர்ந்த கட்டட்ம் என்றனர். - மேலே ஏறுதற்குக் கட்டணம் உண்டு. எனினும் நான் முன்னரே குறித்தமை போன்று, எனக்கு வயது 65க்கு மேலானமையின் சலுகை உண்டு. வயதானவர்களை, மூத்த குடிமகன் (Senior Citizen) என்றே குறிக்கின்றனர். அவர் களுக்குத் தங்கத் தனி இடமும் பிற வசதிகளும் இந்த அரசாங்கம் செய்து தருவது போன்றே, எல்லா இடங்களிலும் இரெயில் - பஸ் பிரயாணம் உட்பட - கட்டணச் சலுகை கள் உண்டு. உண்மையாகவே வயதானவர்களைப் போற்ற வேண்டும் என்று செய்கிறார்களாக அன்றிப் பெரும்பாலோர் பிள்ளைகளால் அனாதைகளாக விடப்பட்டமையின் அவ் வாறு செய்கிறார்களா என எண்ணிப் பார்த்தேன். எங்கோ ஒருசிலர் இந்த நாட்டில் தம் மக்களுடன் வாழ்ந்தாலும் பெரும்பாலோர் தனித்தே வாழ்கின்றனர்.வாழ இயலாதவர் களுக்கு அரசாங்கம், புகலிடம் தந்து உதவுகிறது. இளைய சமுதாயத்தைக் கேட்டால், நாங்கள் பதினெட்டு வயதான வுடனே எங்களை அவர்கள்தாமே வெளியே துரத்தினர். இப்போது எப்படி இணைந்து வாழ்வார்கள்?' என்று கேட் கின்றனர். இங்கே மணமுறிவும் மறுமணமும் மிகச் சாதாரணமாக உள்ளமையின் முன் பெற்ற பிள்ளைகளைப் பற்றிப் பெரும்பாலோர் கவலைப்படுவதில்லை. அவருள்