பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 18.5.85 309 உணவினை உண்டோம். பொதுவாக இந் நகரில் நான் பிற நகரில் கண்ட மக்கள் நடமாட்டமும் நெருக்கமும் இல்லை. சிலவிடங்களிலே சிலருடைய நடமாட்டம் இருந்தது: ஏனோ தெரியவில்லை . கேட்டால் காரணமும் சொல்லவில்லை . சிறிது உணவு கொண்டபின் இங்கேயுள்ள கலைக் கண் காட்சியினைக் காணச் சென்றோம். (Art Exhibition). ஆயி னும் அந்தத் தெருக்கள் தடுக்கப்பெற்றிருந்தன. காவல்துறை யினர் வழிவிட மறுத்தனர். அணியணியாகப் படைத்துறை யினரும் பிறரும் ஊர்வலம் போன்று ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தனர். அந்தப் பக்கம் ஏதோ விழாக்கோலம் பூண்டிருந்தது. வேறு வழியாகவும் செல்ல முயன்றார் திரு. கிருஷ்ணன். ஆயினும் எப்பக்கத்தும் தடை இருந்தது. எனவே அதைப் பார்க்க முடியவில்லை. அங்கே பல்வேறு வகைப்பட்ட ஒவியங்கள், சிற்பங்கள் போன்றவை - மிகப் பழங்காலத்தியவை உட்பட - உள்ளனவாம். சரி முடிந்தால் நாளை காணலாம்; இன்றேல் விடலாம் என்ற எண்ணத்தோடு அறிவியல், தொழில் கண்காட்சிச் சாலை யினைக் காணச் சென்றோம். வழியிலே இறந்த உயிரினக் காட்சியும் (நம் ஊரில் செத்த காலேஜ் என்று சொல்லுவார் கள்) ஒன்றிருந்தது. எனினும் முன் சொன்ன தொழிற் காட்சி மிகப்பெரியதாகையாலும் 5-30க்கு மூடிவிடுவார்க ளாதலாலும், பார்க்க அதிக நேரமாகுமாதலாலும் நேரே அந்தக் காட்சி அரங்கிற்குச் சென்றோம். திரு. கிருஷ்ணன் தன் ஆய்வு சம்பந்தமாக ஏதோ படிக்க எழுத வேண்டி யிருந்ததாகக் கூறி வண்டியில் இருந்தார். திருமதி. கிருஷ்ணன் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு காட்சிச் சாலையினைக் காட்ட முற்பட்டார். சரியாக' 2-30க்கு அதனுள் புகுந்தோம். உலகில் மனிதன் தோன்றிய வரலாறு முதல் அவனுக்குப் பயன்படும் எல்லாப் பொருள்களின் வரலாறுகளும் - அவை