பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.12. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இவைகள் பற்றியும் ஒரு பக்கத்தே விளக்கியுள்ளனர். இதயத்தின் துடிப்பு - அதன் உள்ளமைப்பு போன்றவை அறிய பெரிய இதய உருவம் சமைத்து, அதனுள் துடிக்கும் மெல்லிய ஒலியினையும் புகுத்தி, நம்மை அதனுள்ளேயே புகுந்து அதன் செயல் முறைகளைக் காண வழி செய் கின்றனர். மனிதனுடைய பல், கண், பிற உறுப்புக்கள் ஒவ்வொன்றின் தன்மை, வளர்ச்சி, விளையும் நோய்கள், தடுக்கும் வழிவகைகள் பற்றியும் காட்சியில் காணலாம். இல்வாறே விண்வெளிக் கோளங்களின் அமைப்பினைப் பற்றியும் சிறப்பாக நம் சூரிய மண்டலம் பற்றியும் (Solar System) நன்கு விளக்கியுள்ளனர். இப்படி அணுவளவில் புகுந்து கருவளர் நிலை தொடங்கி, அடங்காது விரிந்துள்ள அண்டகோளம் வரை யில் உள்ள அனைத்தையும் முறையாக விளக்கிக் காட்டும் நிலை உண்மையிலேயே போற்றக் கூடியதாகும். இங்கே ஒலியினைக் காண முடியும், ஒளியினைப் பேசவைக்க முடியும். இருவகை நிலைகளையும் கண்கூடாகக் காணலாம். இன்றைய அணு ஆய்வு வளர்ச்சியின் விளக்கத் தைப் பலப்பல பகுதிகளில் விளக்கிக் காட்டுகின்றனர். இன்னும் சில நாட்களில் பலப்பல அற்புதங்களை இவ்வணுக் கள் நமக்குக் காட்டும் என்பது உறுதி. திருடனைக் காட்டும். கொலையாளியினைப் பிடித்துத் தரும். உள்ளத்தைத் தொடும். 'நினைத்தேன் வந்தாய்’ என்றபடி நாம் நினைக்க நினைப்பவர் நம் முன்னே நிற்கச் செய்யும். மனிதன் செய்ய முடியாது நிற்கும் எத்தனையோ வேலைகளை இது செய்து முடிக்கும். ஆம்! இவற்றையெல்லாம் ஆக்குபவன் மனிதன் தான். இத்தனை அற்புதங்கள் செய்து, மக்கள் வாழ்வினை மலரச்செய்யும் மனிதன் இந்த நிலை மறந்து, அழிவுக்கு இவற்றைப் பயன்படுத்தினால் ஒரே நிமிடத்தில் உலகம் அனைத்தையும் பிடி சாம்பலாக்கவும் முடியும். இதை எண்ணும் போதுதான் உளம் அஞ்சுகிறது. நான் முன்னரே குறித்தபடி இவற்றையெல்லாம் கண்டு வியந்து, போற்றி, மகிழும் அதே வேளையில், அந்த அழிவுப் பாதையினை