பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜினிவா4.4-85 . 28. விளையாட்டு, பிறபொருள்கள் அனைத்தும் உள்ளன) பெரும்பாலோர் உணவு க் கா ன ரொட்டி, ஜாம், வெண்ணெய், பிறவற்றை வாங்கி எடுத்துச் செல்லுகின் றனர். பலர் வீட்டில் ரொட்டி செய்வது கிடையாது எனக் கூறினர். நம் நாட்டு உருளை, வாழைப்பழம், கேர்சு, கேரட் போன்ற பதார்த்தங்களும் உள்ளன. ஆனால் விலைகள் அதிகம். வெங்காயம் மட்டும் விலை குறைவாக (பெரிது பெரிதாக) கிலோ ரூ. 7.50-இந்த நாட்டு 1: பிராங்குக்குக் கிடைக்கிறது. மற்றவை அதிகமே. எல்லா விடத்தும் இறங்கவும் ஏறவும் மின் படிகள் அமைக்கப் பெற்றுள்ளன. படியில் கால் வைத்தால் மெல்லக் கீழ் இறக்கியோ மேல்தூக்கியோ வரும் நிலையில் வருத்தமின்றிச் செல்லலாம். - s இத்தகைய கடைகளைப் பார்த்துக்கொண்டு ரயிலடியில் நுழைந்தேன். அதன் அமைப்பும் சிறந்தது. மேலும் கீழுமாக இரண்டடுக்குகளில், வெவ்வேறு இடங்களுக்கு வண்டிகள் செல்லுகின்றன. நான் முன் சொன்ன்படி எவ்வளவு சாமான்கள் இருந்தாலும் வெளியிலிருந்து ரெயில் பக்கம் வரையில் டிராலியில் கொண்டுவரலாம். போர்டர் என்கின்ற பேரே கிடையாது. எப்பொழுதும் மக்கள் சென்று கொண்டும் வந்துகொண்டும் உள்ளனர். பணம் மாற்றும் நிலையமும் பிற நிலையங்களும் முறையாகச் செயல்படு கின்றன. (நான் எனக்கு வேண்டிய சுவிஸ் நாணயங்களை விமான நிலையத்திலேயே மாற்றிக் கொண்டேன்) ஆடவரும் பெண்டிரும் அணி அணியாகச் செல்லுகின்றனர். சுவிஸ் நாட்டவர் மட்டுமன்றி (விமான நிலையத்திலும்கூட) பிற -ஐரோப்பிய நாட்டவரும் நீக்ரோக்கள் போன்ற ஆப்பிரிக்க நாட்டவரும் ஆசிய நாட்டவரும் மிகத் தாராளமாகப் புழங்குகின்றனர். உள்ளே சென்று ரயிலமைப்புகளைக் கண்டேன். சாதாரண வகுப்பு வண்டி நம் நாட்டு முதல் வகுப்பினைக் காட்டிலும் சிறந்துள்ளது. தேவையாயின் தானாகத் திறந்தும் மூடும் கதவுகளுடன் தூய்ழையாக