பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வயதான அமெரிக்கப் பெண்மணியும் (திருமதி. லி சுலஜ் Lee Shultz) திரு. தேசாய் அவர்களும் (குஜராத்) என்னை வரவேற்றமை மேலும் பெரு வியப்பைத் தந்தது. இருவரும் சின்மயா மிஷினைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு முகவரி மாற்றத்தால் இன்று காலையில்தான் கடிதம் கிடைத்ததாக வும் உடன் புறப்பட்டு வந்ததாகவும் கூறினர். அந்த அம்மையார் நல்ல குடும்பப் பெண்மணியாகவும் சின்மயா மிஷினில் அக்கறை காட்டி வேதாந்த நெறியினைப் போற்று பவராகவும் இருந்தனர். தேசாயும் ஆழ்ந்த பற்றுடையவ்ர். முன் கூறிய அமெரிக்கர் தமிழ்நாட்டில் - தமிழகத்து உதகையை அடுத்த கடலூரியில் 1; ஆண்டு தங்கியிருந்து, அங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறை சாதி, சமயநெறி, பொருளாதார நிலை போன்ற அனைத்தையும் ஆராய்ந் தவர். மதுரை, கோடைக்கானல், சென்னை, காஷ்மீர் முதலிய இடங்களிலும் இருந்து ஆய்வு செய்தவர். எனவே அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மல்ையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை நன்கு பேசுபவராக இருந்தார்.தற்போது. இந்தப் பல்கலைக்கழகத்திலேயே மறுபடி டாக்டர் பட்டத்துக்கு உதகை ஆய்வினைப் பற்றி எழுதி அனுப்பி யுள்ளாராம். அதன்படி ஒன்றினை நம் தமிழ்ப்பல்கலைக் கழகத் துணை வேந்தர் அவர்களுக்கு அனுப்பவும் வைத் திருந்தார். (பின் மாலை அவர் இல்லம் சென்றபோது காட்டினர்) டாக்டர். W.I. சுப்பிரமணியம் அவர் திருவிதாங். கூரில் இருந்த காலத்தில் நண்பராகவும் ஆய்வுக்கு உதவி யாளராகவும் இருந்தாராம். அவர் பல்கலைக்கழகத்தின் வழி என்னை அழைத்துச் செல்ல இருப்பதாகவும், இன்று மாலையில் அங்கே பணிபுரியும் கோவையைச் சேர்ந்த ஒரு அன்பர் வீட்டில் உணவுக்கு ஏற்பாடு செய்யப் பெற்றுள்ள தெனவும், நகர் நலம் காட்ட ஏற்பாடு செய்யப் பெற்றிருப்ப தாகவும் கூறினர். எனவே நாளை மாலை திருமதி. லீ அவர்கள் இல்லம் வருவதாகச் சொல்லிப் புறப்பட்டோம். அவரும் உடன் அப்போதே வரவில்லையே என்ற குறை யோடு சென்றார்.