பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியேட்டல் (வாஷிங்டன்) 20-5-85 325 திலேயே) அனைத்தும்-பக்கத்தில், பாய்ந்தோடும் ஆறு. உயரிய மூன்றடுக்குப் பாலம், பிற கோபுரங்கள், உலகப் பொருட்காட்சிநடந்த இடத்தில் உள்ள உயரியகோபுரம்,பிற மாளிகைகள்,பல்கலைக்கழக உயர் கட்டிடங்கள் அனைத்தும் சுற்றியுள்ள இயற்கை வளத்தோடு நன்கு காட்சியளித்தன. ஒய்வுக்குப் பிறகு சரியாக ஐந்து மணிக்குத் தயாராக இருந் தேன். அன்பர் கீழே வந்து தயார்தானே என்று கேட்டு, நான் ஆம்' என்றதும் அடுத்த நிமிடம் அறை வாயிலில் நின்றார். இந்திய நாட்டில் பழகிய காரணத்தால் இந்தியர் ஐந்து என்றால் 7 மணிக்குத்தானே தயாராவார்கள் எனவே அவ்வாறு கீழிருந்து கேட்டு வந்தேன்' என்றார். grgr&Glb 5lh Grrl :.tg á gup á Glb *lndian Punctuality" "இந்தியன் பக்சுவாலிடி'என்ற தொடர் நினைவுக்கு வந்தது. மறுபடியும் அவர்தம் க்ாரில் என்னை அழைத்துச் கொண்டு, பல்கலைக்கழக இடங்கள் பலவற்றையும் காட்டி, பின் தம் குடிலுக்கு அழைத்துச் சென்றார். அவர் தற்போது யாதொரு பணியும் இன்றி இருந்தார், துணைவியாரும் பல்கலைக் கழகத்தே பயின்றார். எனினும் போதுமென்ற மனம்ே பொன்செய்யும் மருந்து' என அமைதியாகவும் அதில் உறுதியாகவும் இருந்தார். இந்த நாட்டில் இத்தகைய ஒரு பிறவி உள்ளதைக் கண்டு வியந்தேன். சிறிய வீடு (வாடகை 325 டாலர்) மிகச்சிறிய கார், இருவர் வாழ்வு எல்லாவற்றிற்கு 600 (அ) 700 டாலர் எல்லையே போதுமென வாழ்கின் றனர். இடையில் என்னைப்போல் வருகின்றவருக்கு உதவு கின்றார். வேண்டாம் என்றாலும் விடுவதில்லை. அவர் தமிழ்ப்பற்று அளவிடற்கரியது. இருந் தமிழே உன்னால், இருந்தேன்' என்று தமிழகத் தலைவர்களும் பிறரும் வாழ் வதைக் கண்ட எனக்கு, இருந்தமிழே உனக்காக இருந்தேன். என்று எங்கோ 13000 12000 கல்தொலைவில் ஒருவர் வாழ் கிறார் என்பதைக் கண்டபோது, தமிழ், தமிழ் நாட்டில் இன்றேனும் உலகில் எப் பகுதியிலானும் என்று முள தென் தமிழாக - கன்னித் தமிழாக வாழும் என்ற நினைவில் அமைதி பெற்றேன். .