பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியேட்டல் (வாஷிங்டன்) 20.5.85 327. லாம் பலர் கார்களை நிறுத்திவிட்டு ஒடிக்கொண்டிருந்தனர். 5 கல்லுக்கு மேலும் உள்ள தொலைவிலிருந்து காரில் வந்து, இங்கே ஒடுவதைக் காண எனக்கு வியப்பாக இருந்தது. அவ்ர் கள் நடந்தே வரக் கூடாதோ எனக் கேட்டேன். இது தான் நாகரிகம்; உடற் பயிற்சி வேண்டுபவர் நடக்கலா மல்லவா! தங்கள் செல்வ வளத்தையும் காட்ட வேண்டும்; உடல் நலத்தையும் பேணி வேண்டும்' என்ற அவர்கள் ஆசையை விளக்கினார். எப்படியோ, நான் பிறவிடங்களில் எங்கும் காணாத வகையில் இங்கே மக்கள். சிறியரும் பெரியரும் . தம் உடலை ஒம்பும் நிலை கண்டு மகிழ்ந்தேன். சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியைச் சுற்றி வந்தோம். தூரத்தே நீண்ட தீவும் சிறு குன்றுகளும் இருந்தன. அவற்றின் இடைவழியில் மற்றொரு பக்கத்தில் உள்ள பெருவெளி வழியே கப்பல்கள் துறைமுகத்துக்கு வரும் என்று கூறினார். தூரத்தே பெருந்துறை முகம் காட்சி தந்தது. கீழைப் பகுதியும் மேலைப் பகுதியும் இணையும் பாலமாக இதுவும், அடுத்து நான் காணப் போகும் இரு பெரு நகரங் களும் (சான்பிரான்சிஸ்கோ - லாஸ் ஏஞ்சிலஸ்) அமைகின்ற நிலையினை உணர்ந்தேன். - - - அவர்கள் வீட்டில் இருந்தபோது, இங்கே உள்ள தமிழ்த் துறையின் தலைவர் திரு. சிப்மென் அவர்கள் தொலைபேசி யில் பேசி என் பயணம் பற்றிக் கேட்டு, நாளை நிகழ்ச்சிகள் பற்றி விளக்கி, இன்று மாலை மற்றொரு தமிழர் வீட்டில் உண்ண ஏற்பாடு செய்யப் பெற்றதையும் கூறி, நாளை காலை 9.30க்குச் சந்திப்பதாகச் சொன்னார். நான் நன்றி கூறி அமைந்தேன். எனவே இரவு 7 மணிக்கு திரு. ஆதம் அவர்கள் அந்த அன்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அத் தம்பதிகள் திரு. நடராசன் திருமதி கற்பகம் ஆகியோர் (குழந்தை பிருந்தா 5 வயது . முதல் வகுப்பு) வரவேற்றனர். அவர்கள் பொள்ளாட்சியை அடுத்த ஊர்களைச் சேர்ந்தவ ரென்றும், திரு நடராசன் கோவையில் பொறியியல் பயின்ற தாகவும் எம். எஸ் சி (M. Sc.) பி. எஸ். ஜியில் பயின்றதாக