பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அழைத்துச் சென்றார். அங்கேதான் தமிழ் ஆங்கில அகராதி உருவாகின்றது. விளைச் சொற்களை மட்டுமே எடுத்துக் கொள்ளுகின்றனர். அவற்றை முறைப்படி தொகுத்து, எழுதித்தர நம் சேலத்தைச் சேர்ந்த திரு. பழநிச்சாமி (மணி) என்பவர் இசைந்து, பொறுப்பேற்றுள்ளனர். அவர் எழுதிய கையேட்டுப்படியின்ை எனக்குக் காட்டினர். நன்கு அமைந்து இருந்தது. அகராதிச் சொல்லமைப்பு முறைபொருள்வகை முதலியவற்றைப் பேசினோம். கணிப்பொறி யில் தமிழ் எப்படி இயங்குகிறது என்பதைக் காட்டினர். கணிப்பொறி ஜப்பானில் செய்தது. ஆகையால் அனைத்து விளக்க விளக்கங்களையும் ஜப்பான் மொழியிலேயே அப்பொறி தருகிறது. ஜப்பான் மொழியில் எழுத்தமைப்பு. நம் தமிழினும் நுண்ணியதாகவும் புள்ளிகள் உடையதாகவும் உள்ளமையின் அதைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறினார். (அமெரிக்கா எவ்வளவு முன்னேற்றமடைந்தாலும் இன்னும் பல பொருள்களுக்கு - கார் . கணிப்பொறி தொடங்கி ஜப்பான் நாட்டையே நம்பி இருக்கிறது.) இம் மேலைப் பகுதி அமரிக்கா பொதுவாகக் கிழக்கமை ஜப்பான் சீனாவு டன் வாணிகத் தொடர்பு அதிகமாகக் கொண்டுள்ளதை அறிந்தேன். எனவே அவர் அக் கணிப்பொறியைத் தேர்ந்த தில் தவறு இல்லை. அது தமிழ் எழுத்துக்களை வரிசைப் படுத்தி, முறையாகத் தருவதையும் சொல் பொருள் ஆக்க நெறி அமைப்பினை உருவாக்குவதையும் விளக்கி, முன் எடுத்தவற்றின் படிகளை வேறு மறுபடி எடுத்து எனக்குத் தந்து உதவினர். விரைவில் அவர் தமிழகம் வர இருப்பதாக வும், திரு. பழநிச்சாமி அவர்களுட்னும் மற்றவருடனும் கலந்து, நூலை உருவாக்கும் பணி பற்றி இறுதி முடிவு எடுக்கப் போவதாகவும் கூறினர். அந்த அமைப்பில் ஒன்றை ஈண்டு சுட்டின் நலமாகும். (அனைத்தும் வினைச் சொற் களே எனக் கூறினேன்.) abandon என்ற சொல்லுக்கு உள்ள பல பொருள்களைக் தமிழிலும் ஆங்கிலத்திலும் முறைப்படுத்தி தந்துள்ளனர்.